Share on Social Media


Beast Update: நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று முடிந்ததை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினார். 

இதற்கிடையில் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பீஸ்ட் (Beast) படப்பிடிப்பை தொடங்கலாம் என்று நடிகர் விஜய் (Actor Vijay) தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

ALSO READ | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைவாக வந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

முன்னதாக விஜய்யின் (Actor Vijay)நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான திர்பார்ப்பை அதிகமாகி வருகிறது. 

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்தப் படத்தில் பிரபல நடிகை அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும், அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Thalapathy Vijay: விஜய் பிறந்தநாள் சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸை வெளியிட்டார் தாணு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *