Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • நெல்சன் பாதையில் விஜய்
  • முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் விஜய்


மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் FIRST LOOK விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற ஆங்கில புத்தாண்டிற்கு படத்தின் FIRST SINGLE வெளியாகப்போவதாக சொல்லப்பட்டிருக்கின்றது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, யோகிபாபு, VTV கணேஷ், ஜான் விஜய், கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் . முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார்.

Vijay:பிக் பாஸ் சஞ்சீவுக்காக விஜய் என்ன செஞ்சிருக்கார்னு பாருங்க
படத்தின்மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரிக்கும் வேளையில் படத்தின் கதைக்களம் இணையத்தில் கசிந்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தில் தங்கக்கடத்தலை மையமாகவைத்து கதைக்களத்தை அமைத்திருக்கிறார் நெல்சன்.

அவரது முதல் படமான கோலமாவு கோகிலா திரைப்படம் கஞ்சா கடத்தலை மையமாக வைத்து உருவாக்கிருந்தார்.டாக்டர் படம் கூட பள்ளி பிள்ளைகளின் கடத்தலை மையமாகவைத்து எடுக்கப்பட்டது தான். இவ்வாறு கடத்தல் சம்மந்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் நெல்சன் பீஸ்ட் படத்திலும் தங்கக்கடத்தலை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் .மேலும் இப்படத்தில் விஜய் கமாண்டோவாக வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது .



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.