Share on Social Media


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்ஷன் திரைப்படம் “பீஸ்ட்”. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  

ALSO READ | அண்ண யாரு தளபதி! ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜய்!

ஏப்ரல் 9,2021-ல் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 15 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, ஏப்ரல் 26 அன்று படக்குழு சென்னை திரும்பியது, அங்கு ஒரு அறிமுகப் பாடல் மற்றும் சில அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டன.   கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்கியது.  படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்த பிறகு, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

கனமழை காரணமாக ஒரு பாடல் மட்டும் நிறைவு செய்யப்படாமல் இருந்ததையடுத்து அதன் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டது.  சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தை தெரிவிக்கும் விதத்தில் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இப்படத்தில் இறுதி நாளை நிறைவு செய்ததாக அண்மையில் பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

 

இன்னும் 10 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் உள்ளது என்று தகவல்கள் வெளியான நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.  அதில் இயக்குனர் நெல்சனும், நடிகர் விஜயும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.  மேலும் கூடிய விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *