Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ஆன்லைனில் கசிந்த பீஸ்ட் புகைப்படம்
  • புகைப்பட கசிவால் கோபத்தில் நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என்றார்கள். இந்நிலையில் டிசம்பர் மாதம் தான் படப்பிடிப்பு முடியும் என்று கூறப்படுகிறது.
Vijay: விஜய்யின் பீஸ்ட் பட வீடியோ லீக்காகி வைரல்பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ கசிந்து வைரலானது. இந்நிலையில் விஜய்யின் புகைப்படம் கசிந்துவிட்டது. சென்னையில் ஷாப்பிங் மால் செட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ளை சட்டையில் ரத்தக்கறையுடன் விஜய் ஆக்ரோஷமாக நிற்கும் புகைப்படம் கசிந்திருக்கிறது. இப்படி எதுவும் கசிந்துவிடக் கூடாது என்று தான் படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

அப்படி இருந்தும் வீடியோவும், புகைப்படமும் கசிந்துவிட்டது. இதனால் நெல்சன் திலீப்குமார் கோபத்தில் இருக்கிறாராம்.

இதற்கிடையே பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த புகைப்படதை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்று விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தில் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பீஸ்ட் மூலம் பூஜா ஹெக்டே மீண்டும் கோலிவுட் வந்திருக்கிறார்.

பீஸ்ட் படத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *