Share on Social Media


இந்த நிலையில் தான் அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டி.விக்காக டி.ஆர்.பி. மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஆனால், அர்னாப் இதனை முற்றிலுமாக மறுத்தார். இந்த விவகாரம் ஊடக உலகில் பூதாகரமாக வெடித்தது. பின்னர், இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக ரிபப்ளிக் டிவியின் சி.இ.ஓ.வான விகாஸ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் BARC (Broadcast Audience Research Council) நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வான பார்த்தோ தாஸ் குப்தாவிடம் தனது சேனலுக்கான டி.ஆர்.பி. முன்னேற்றம் குறித்து பேசிய 500 பக்கங்கள் கொண்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், கோஸ்வாமி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கத்தின் உதவியை அதிகமாக எதிர்பார்த்து செயல்பட்டு வருவதாகவும், இது, தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி பர்வையாளர்களை மதிப்பிட ட்ராய் புதிய சீர்த்திருதங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அது ரிபப்ளிக் சேனலை பாதிக்கும் என்றும் தாஸ் குப்தா அர்னாபிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளதுஇதையடுத்து, அர்னாப்பின் செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அர்னாபின் டி.ஆர்.பி. மோசடி வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவரை, அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்படமாட்டார் என்றும் கூறப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *