Share on Social Mediaஆயுர்வேத மருத்துவம் உடலில் உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது. சிகிச்சை என்று சொல்வதை விட நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து அதை சரிசெய்ய முயற்சிப்பதால் இந்த நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்கலாம். தீவிரமாகாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பக்கவிளைவுகளை தடுக்கலாம்.

​ஆயுர்வேதத்தில் சர்க்கரை வியாதி

நீரிழிவு இருப்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆயுர்வேத குறிப்புகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். G.K.தாராஜெயஸ்ரீ BAMS.

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி, வேறு எதற்கு எப்படி பயன்படுத்தலாம், மருத்துவர் அறிவுரை!

ஆயுர்வேதம் நீரிழிவு நோயை மதுமேஹா என்று அழைக்கிறது. ஆயுர்வேதத்தின் படி வாதம், பித்தம், கபம் மற்றும் ஆமா கணையத்தில் அடைப்புகளை உருவாக்கி இன்சுலின் சுரப்பதை நிறுத்துகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு என்று அறியப்படுகிறது.

​நீரிழிவு நோய்

samayam tamil Tamil News Spot

இரத்தத்தில் அல்லது சிறுநீரில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. நீரிழிவு இருப்பதன் பொதுவான அறிகுறிகள் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் , அதிக பசி, அல்லது சோர்வாக உணர்தல், எதிர்பாராத எடை இழப்பு, வறண்ட அல்லது அரிப்பு தோல், உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு மற்றும் மங்கலான பார்வை உண்டாகலாம்.

டைப் 1 -நீரிழிவு. இது இன்சுலின் சார்ந்த நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தை பருவத்தில் தொடங்குகிறது.

டைப்- 2 நீரிழிவு. இது இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதால் இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது.

​சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பானம்

samayam tamil Tamil News Spot

நெல்லிக்காய் சக்திவாய்ந்த ஆயுர்வேத மருத்துவ மூலிகை. 20 மில்லி நெல்லிக்காய் சாற்றை அரை டீஸ்பூன் மஞ்சளுடன் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதும் சிறந்த பலனை தரும்.

பாகற்காய் சாறை குடிப்பதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கசப்பு நிறைந்த பாகற்காய் இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெயர் பெற்றது.

இரவு செம்பு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி காலையில் இந்த நீரை குடித்து வரவும்.

கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் கலவையானது நீரிழிவு நோய்க்கு எதிரான சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

முருங்கை இலைகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். தினமும் காலையில் இந்த சாறு குடிக்கலாம்.

​திரிபலா சூர்ணம்

samayam tamil Tamil News Spot

திரிபலா சூரணத்தில் உள்ள மூலப்பொருள்கள் மோசமான நோய்கள் மற்றும் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்கும்.

50 கிராம் திரிபலா + 50 கிராம் மஞ்சள் கலந்து தினசரி இரண்டு வேளை எடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் அரை டீஸ்பூன் அளவும். இரவு உணவுக்கு முன் அரை டீஸ்பூனும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வரலாம்.

​இலவங்கப்பட்டை பொடி

samayam tamil Tamil News Spot

இலவங்கப்பட்டையை பொடித்து வைத்துகொள்ளவும். இதுவும் நீரிழிவு கட்டுப்பாட்டை கொண்டுவரும் ஆயுர்வேத மருத்துவத்தின் கீழ் வரும் மற்றொரு இயற்கை மூலப்பொருள் ஆகும்.

​நாவல் பழம்

samayam tamil Tamil News Spot

நாவல் பழத்தில் 80% மேல் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் சுக்ரோஸ் இல்லை. நாவல் பழத்தை அளவாக தினசரி எடுக்கலாம்.

ஆசன வாய் அரிப்பு, எரிச்சல், வலி, பிளவு கடுமையா இருந்தால் இதுல ஒண்ணு செய்யுங்க, கட்டுப்படும்!

இதன் விதைகளை பொடி செய்து 1 டீஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான இளஞ்சூடான நீரில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்கவும்.

​வெந்தய விதைகள்

samayam tamil Tamil News Spot

வெந்தயம் 2 டீஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் அந்த விதைகளை பிசைந்து கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

அதிகாலையில் பூண்டு பல் 2 மென்று சாப்பிடலாம். இதுவும் நீரிழிவை கட்டுக்குள் வைக்க செய்யும்.

​ஆயுர்வேத மூலிகைகள்

samayam tamil Tamil News Spot

வேப்பிலை, துளசி, குடுச்சி போன்றவை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவும் மற்ற பொதுவான மூலிகைகள் ஆகும். இது உடலில் இன்சுலின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவுகின்றன.

வேப்பிலை – 10

துளசி – 10 இலை

வில்வா இலை – 10

மூன்றையும் சாறு எடுத்து கலக்கவும். இந்த கலவை இரத்த சர்க்கரை அளவு குறைப்பதற்காக வெறும் வயிற்றில் தண்ணீருடன் குடிக்கலாம்.

​பிரிஞ்சி இலை மற்றும் கற்றாழை

samayam tamil Tamil News Spot

பிரிஞ்சி இலையை பொடியாக்கி வைக்கவும். அரை டீ ஸ்பூன் பொடியுடன் மஞ்சள் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் எடுத்து கலந்து விடவும்.

இதை மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு முன் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்து வரவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

​​​இலைச்சாறுகள்

samayam tamil Tamil News Spot

ஆலமரத்தின் பட்டை எடுத்து நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு சூடாக்கவும். தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை சூடாக்க வேண்டும். இதை இறக்கி குளிரவைத்து குடிக்க வேண்டும்.

மா இலைகளை வெயிலில் உலர்த்தி காயவைத்து, பொடியாக நறுக்கி தினமும் காலையிலும் மாலையிலும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

துளசி இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாற்றை 2 டீஸ்பூன் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

​வெண்டைக்காய்

samayam tamil Tamil News Spot

வெண்டைக்காய்களின் முனையை வெட்டி, ஒரு முட்கரண்டி பயன்படுத்தி பல இடங்களில் குத்தி விடவும். வெண்டைக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிடவும்.

மாதவிடாய் அதிக உதிரபோக்கை கட்டுக்குள் வைக்கும் தும்பை, எப்படி எடுக்கணும், மருத்துவர் தரும் குறிப்பு!

காலையில் வெண்டைக்காயை தனியே எடுத்துவிட்டு வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல வாரங்கள் இதை செய்து வரவும்.

நீரிழிவு நோயாளிகள் இந்த மருந்துகளை எடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி சரியான அளவு, எவ்வளவு காலம் என்பதையும் ஆலோசிக்க வேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *