Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • டிச. 11 வரை மீண்டும் முழு ஊரடங்கு
  • அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 11 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, உலகையே ஆட்டிப் படைத்து விட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால், தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கியது. இதை அடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 22 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.

10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும், அதன் பிறகு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தென் ஆப்பிரக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று, ஒமைக்ரான் என்ற பெயரில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
வைரஸ் பரவலை எதிர்கொள்ள மாஸ்டர் பிளான்; களத்தில் இறங்கிய WHO!
இந்நிலையில், ஆஸ்திரியா நாட்டில் இன்றுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *