Share on Social Media


களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் சற்குணம் இரண்டாவது முறையாக அதரவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சண்டிவீரன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

விமல் மற்றும் ஓவியா நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சற்குணம். தொடர்ந்து இவர் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வெளியான நையாண்டி, சண்டிவீரன், களவாணி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் சற்குணம். இந்த திரைப்படத்தில் அத்ர்வாவுடன் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்களுடன் நடிகை ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ் ஜெயப்பிரகாஷ் ,சிங்கம்புலி, மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமந்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் அல்லு அர்ஜுன் மகள்!
லைக்கா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவையாறு மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி நடைபெற உள்ளது. சற்குணத்தின் முந்தைய திரைப்படங்களை போல இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளது.

அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே படங்கள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும் அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *