Share on Social Media

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நடப்பு சாம்பியன் பூஜா ராணி (75 கிலோ) பெற்றார். துபாயில் ஞாயிறு (மே 30) அன்று, ஆறு முறை உலக சாம்பியனான எம்.சி மேரி கோம் (51 கிலோ) உட்பட இந்தியாவின் மற்ற மூன்று குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ள போஜா (75 கிலோ) உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவை நேர்த்தியான முறையில் தோற்கடித்தார். 

மோவ்லோனோவாவை செயலிழக்கச் செய்த அற்புதமான ஒன்-பவுட் திறனுக்காக பூஜாவுக்கு  10,000 டாலர் பரிசுத் தொகை கிடைத்தது. மோவ்லோனோவால் அவருக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எனினும், ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள மேரி கோம் (Mary Kom) (51 கிலோ), மற்றும் இந்த போட்டிகளில் தற்போது அறிமுகமான லால்பூட்சைஹி (64 கிலோ) மற்றும் அனுபமா (81 + கிலோ) இரண்டாம் இடங்களைப் பெற்றன. 

எனினும், மூவரது ஆட்டமும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மிகவும் கடுமையாக ஆடி இறுதியில் மூவரும் இரண்டாம் இடங்களைப் பெற்றன. இவர்கள் வெள்ளி பதக்கங்களுடன் தலா 5,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையைப் பெற்றனர். ஒலிம்பிக்கில் பங்குகொள்ளவிருக்கும் மேரி கோம் கஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பேவிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்றார். 

இந்த போட்டிகளில் மணிப்பூர் சூப்பர் ஸ்டார் மேரி கோம் பெற்றுள்ள ஏழாவது பதக்காகும் இது. ஆசிய போட்டிகளில் 2003 ஆம் ஆண்டு பதிப்பில் அவர் தங்கம் பெற்றார். அதுதான் ஆசிய போட்டிகளில் அவரது முதல் பதக்கமாகும். நேற்று அவர் பெற்ற பதக்கத்துடன், ஆசிய போட்டிகளில் அவர் இதுவரை ஐந்து தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். 

ALSO READ: IPL 2021 மீதமுள்ள போட்டிகள் UAE-ல் நடக்கும்: அறிவித்தது BCCI

லல்பூட்சைஹி 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்றார். எனினும், தனது சக போட்டியாளரான மிலானா சஃப்ரோனோவாவுக்கு அவர் ஒரு வலுவான போட்டியை அளித்தார். இவர் இந்த போட்டிகளில் கலந்துகொண்டது ஒரு சுவாரசியமான சம்பவம்தான். இந்தியாவின் அனுபவமுள்ள விலோ பாசுமதாரியின் பாஸ்போர்ட் காலாவதியானதால், அவருக்கு மாற்றாக லல்பூட்சைஹி கடைசி நேரத்தில் குழுவில் சேர்ந்தார். 

இந்திய வீராங்கனை அனுபமா, முன்னாள் உலக சாம்பியனான (World Champion) கஜகஸ்தானின் லாசாத் குங்கீபாயேவாவுக்கு எதிராக களம் இறங்கினார். கடைசி நிமிடம் வரை அவர் அபாரமாக ஆடி சரியான போட்டியை கொடுத்தார். எனினும் இறுதியில் 3-2 என்ற கணக்கில் அவர் தோல்வியுற்றார். 

முன்னதாக, தன்னை விட 11 வயது குறைந்த ஒரு போட்டியாளரை எதிர்கொண்ட 38 வயதான மேரி கோம் ஒரு அற்புதமான தொடக்கத்தைக் கொடுத்தார். தனது கூர்மையான எதிர் தாக்குதல்களின் பயனாக தொடக்க சுற்றை எளிதாக வென்றார். எனினும், இரண்டாவது சுற்றில் அவர் தோல்வியை எதிர்கொண்டார். மூன்றாவது சுற்றில் கடுமையான போட்டி இருந்த நிலையில், இறுதியில் அவர் தோல்வியுற்றார்.

திங்களன்று, ஆண்கள் இறுதிப் போட்டியில் அமித் பங்கல் (52 கிலோ), சிவா தாபா (64 கிலோ) மற்றும் சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். ஒலிம்பிக் (Olympics) மற்றும் உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஷாகோபிடின் சோயிரோவுக்கு எதிராக பங்கல் போட்டியிடுவார். இது 2019 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். 

ஆசிய விளையாட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் பாதர்சுக் சின்சோரிக்கு எதிராக தாபா விளையாடுவார். தனது நான்காவது தங்கத்தை நோக்கி விளையாடவுள்ள கசக் ஜாம்பவான் வஸிலி லெவிட்டை சஞ்சீத் எதிர்கொள்வார்.

அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்குச் செல்லும் சிம்ராஞ்சித் கவுர் (60 கிலோ), விகாஸ் கிரிஷன் (69 கிலோ), மற்றும் லோவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), மற்றும் ஜெய்ஸ்மைன் (57 கிலோ), சாக்ஷி சவுத்ரி (64 கிலோ), மோனிகா (48 கிலோ), சாவிட்டி (81 கிலோ) மற்றும் வருந்தர் சிங் (60 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

அவர்கள் அனைவருக்கும் வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்காக தலா 2,500 டாலர் பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது.

ALSO READ: கோலி கூறிய இந்த வார்த்தை, தோனி – கோலி ரசிகர்கள் நெகிழ்ச்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *