Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ஆர்யன் கானுக்கு விஷால் டட்லானி ஆதரவு
  • மும்பை சிறையில் இருக்கும் ஆர்யன் கான்

பிரபல பாலிட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 2ம் தேதி சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டபோது போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 7ம் தேதி வரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலில் இருந்தார் ஆர்யன் கான். அதன் பிறகு 14 நாட்களில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

மும்பையில் இருக்கும் ஆர்தர் சாலை சிறையில் இருக்கிறார் ஆர்யன் கான். அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாடகரும், இசையமைப்பாளருமான விஷால் டட்லானி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அதானி துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, விவசாயிகளை பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கொலை செய்ததில் இருந்து கவனத்தை திருப்பவே ஷாருக்கான் மற்றும் அவரின் குடும்பத்தை ஸ்மோக்ஸ்கிரீனாக பயன்படுத்தியுள்ளனர் என்றார்.
போதை பார்ட்டி: அதிகாரிகளிடம் ஷாருக்கான் மகன் சிக்கியது எப்படி தெரியுமா?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *