Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • அப்பாவான பிக் பாஸ் ஆரவ்
  • ஆண் குழந்தையை பெற்றெடுத்த ராஹீ

ஓ காதல் கண்மணி படம் மூலம் நடிகரானவர் ஆரவ். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் இன்று வரை பிரபலம். பிக் பாஸ் வீட்டில் ஆரவுக்கும், ஓவியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த காதல் சில ஆண்டுகள் தொடர்ந்து பின்னர் முறிந்துவிட்டது.

ஓவியாவை பிரிந்த பிறகு நடிகை ராஹீயை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

ராஹீ கர்ப்பமாக இருக்கும் குட் நியூஸ் வந்தது. இந்நிலையில் அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆரவ் தெரிவித்துள்ளார்.

அப்பாவான ஆரவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார் ஆரவ். அவர் ஹீரோவாக நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் நம்பிக்கையுடன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
நல்ல பொண்ணா காட்டுங்க சார் கட்டிக்கிறேன்: சிம்பு



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.