Share on Social Media


தமிழ், தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அனுஷ்காவிற்கு , பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டிய நடிகை அனுஷ்கா, அதன்பிறகு உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. இந்நிலையில், தெலுங்கில் ஸ்டேன்ட் அப் காமெடியனாக இருந்து ஹீரோவான நவீன் பாலிஷெட்டியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைர்லாகி வருகிறது. அதில், எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். அடுத்தவர்களை நேசிப்பதை நேரில் சொல்லுங்கள். எல்லாவற்றுக்கும் பதில் கருத்து சொல்லி வருந்தாதீர்கள். உலகத்தின் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க உங்களால் ஆன முயற்சியை செய்யுங்கள். எல்லாவற்றிலும் நல்லதை அழகானதை தேடுங்கள். வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள். நடந்துபோனதை நினைத்து வருத்தப்படாமல் புதிய ஆரம்பங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை நிராகரித்த முன்னணி நடிகரின் தம்பி: யார் தெரியுமா..?
எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருங்கள் அதிகமாக ஆசைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நிறைய கனவுகளையும். லட்சியங்களையும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கவலையை யார் போக்குகிறார்களோ அவர்களுடன் நிறைய நேரத்தை கழியுங்கள். தற்போதைய சூழலில் உயிரோடு இருப்பதன் மூலம் நாம் எவ்வளவு அதிர்ஷடகாரர்கள் என்பதை நினைத்து பாருங்கள். வாழ்கை எவ்வளவு அழகாக உள்ளது என்பதை மறுபடி மறுபடி நினைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *