Share on Social Media


சமீப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘அண்ணாத்த’!! கடந்த வாரம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியன்று  ‘அண்ணாத்த’ படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி ஏற்கனவே முடித்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அண்ணாத்த படம் குறித்த ஒரு மிக முக்கிய அப்டேட் வந்துள்ளது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலை மீண்டும் ஒரு முறை ரஜினியின் இண்ட்ரோ சாங்கில் ரசிகர்கள் கேட்கவுள்ளார்கள்.

அண்ணாத்த படத்திற்கு டி.இமாம் இசை அமைத்துள்ளார். ரசிகர்களின் மனதை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டு, இயற்கை எய்திய எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு முன்னரே இமாம், எஸ்.பி.பி. குரலில் அண்ணாத்த படத்தின் பாடலை பதிவு செய்துவிட்டிருந்தார்.

அந்த பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளான செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  நமது காலத்தின் மிகப்பெரிய பாடகரான  எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் அந்த பாடலை செப்டம்பர் 25 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது. 

ALSO READ: முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

அண்ணாத்த (Annaatthe) படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிக அளவில் உள்ளது. படத்தின் பெயரின் படி, அவர் ஒரு கிராமத் தலைவராக படத்தில் நடித்திருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என நம்பப்படுகின்றது.

சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக, இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி ரிசீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 25 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆனால், அது ரஜினி ரசிகர்களுக்கும், எஸ்.பி.பி ரசிகர்கள்ளுக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும். 

காதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB!!

நிலாவைப் பார்த்தாலும், மலரைப் பார்த்தாலும், குழலைப் பார்த்தாலும், குழல் ஊதும் கண்ணனைப் பார்த்தாலும், அந்தி மழையைப் பார்த்தாலும், மலையோரம் வீசும் காற்றை சுவாசித்தாலும்…. எதிலும், எப்போதும் SPB-யின் நினைவு வருவதை தடுக்க முடியாது.

அவர் மறைவுக்கு பிறகு, அவரது குரலில் மற்றொரு புதிய பாடல், சற்று உணர்வுப்பூர்வமான விஷயம்தான்!!

காற்றிருக்கும் வரை இசை இருக்கும். இசை இருக்கும் வரை SPB-யின் குரல் நீங்காத ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்!! 

ALSO READ: அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *