Share on Social Media


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கே ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. இதனால் உஷாரான படக்குழுவினர் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாகவே ‘அண்ணாத்த’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டனர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த பிறகு ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை மீண்டும் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அண்மையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது.

இவருக்கு ஜோடியாக தான் நடிப்பேன்: ஓப்பனாக கூறிய நடிகை கங்கனா ரனாவத்!
இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. போஸ்டரில் இடம்பெற்ற ரஜினியின் அட்டகாசமான தோற்றம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புல்லட்டில் அரிவாளுடன் மிரட்டலாக ரஜினி வரும் மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ‘அண்ணாத்த’ படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *