Share on Social Media


சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்று சூப்பரான நாளாக இருந்துள்ளது. இன்று காலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மாலை 6 மணிக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

இப்போது படத்தின் செகண்ட் லுக்கையும் வெளியிட்டுள்ள பட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு இடையில் ஆரவாரத்தை கிளப்பியுள்ளது.

செகண்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் அசால்டாக ஒரு கையால் பைக்கை ஓட்டிக்கொண்டு மறு கையில் அரிவாளை பிடித்திருப்பது ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த (Annaatthe). இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ALSO READ: முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்தின் (Rajinikanth) அண்ணாத்தே (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர்.

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டு மீண்டும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

இதற்கிடையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்த நிலையில் தற்போது இன்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதுடன், காலையில் ஃபர்ஸ்ட் லுக்கும் மாலையில் செகண்ட் லுக்கும் ரிலீஸ் ஆகி ரசிகர்களை மகிழ்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட வருடங்கள் கழித்து முழுக்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்துள்ளார் ரஜினி (Rajinikanth). 

ALSO READ: அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *