Share on Social Media


கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை முழுவதுமாக முடிக்காமல், ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார் ஷங்கர். அத்துடன் இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் நாயகி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், வேறு படங்களைத் தொடங்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஷங்கருக்குத் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பினை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக இறங்கினார் ஷங்கர்.

தில் ராஜ் தயாரிப்பில் ராம்சரண் நடிப்பில் தனது அடுத்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார் ஷங்கர். . தமிழ், தெலுங்கு, இந்தி என பான் – இந்தியயா திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. தில் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 50 படம் இது என்பதால், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக நடிக்க ஆலியா பட், கியாரா, அத்வானி, மாளவிகா மோகன் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

நான் கல்லூரி படிப்பை கைவிட இவர்தான் காரணம்: பிரபல இயக்குனரை கை காட்டும் கார்த்திக் நரேன்!
இந்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மற்றொரு கதாநாயகியாக அஞ்சலி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சி15‘ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தமன் இசையமைக்கவுள்ள இந்த படத்த்தி படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலிருந்து துவங்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். ராம்சரண் நடிக்கும் படத்தை முடித்தவுடன், இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘அந்நியன்’ ரீமேக் படத்தை ஷங்கர் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *