Share on Social Media


அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் புளூ ஆரிஜின் (Blue Origin) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

சிறிது நாட்களுக்கு முன்னால், அமேசானின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகிய  ஜெப் பெசோஸ் (Jeff Bezos) வரும் 20ம் தேதியன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.  தனக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் (Blue Origin) விண்வெளி நிறுவனத்தின் மூலம், மேற்கொள்ளப்போகும் இந்த பயணத்தில், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி  வாலி பங்க் (Wally Funk) ஆகியோர் இவருடன் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

1960 களின் முற்பகுதியில் நாசாவின் (NASA) மெர்குரி 7 (Mercury 7 ) விண்வெளி வீரர்களுக்காக நடத்தப்பட்ட பரிசோதனையில் 13 பெண் விமானிகளும் வென்றனர். அதில் ஒருவர் தான் வாலி ஃபங்க். ஆனால் விண்வெளி பயணத்திற்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் அவரால், விண்வெளி பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Amazon: அமேசான் CEO பதிவியிலிருந்து ஜெப் பிஸோஸ் விலகுகிறார்

தற்போது ஜெப் பெசோஸ் வரும் 20ம் தேதியன்று மேற்கொள்ளப்போகும் விண்வெளிப் பயணத்தில், சர்வதேச விண்வெளி மையம் வரையறுத்துள்ள எல்லை வரைக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலே குறிப்பிட்டவர்களை தவிர மேலும் 2 பேர் பயணிக்கலாம் என்ற நிலையில், அந்த இருக்கைகள் ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு இருக்கையை அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோஸ் டையமன் (Joes Daemen) என்பவர் 28 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹205 கோடிக்கு ஏலம் எடுத்தார். ஆனால், பயண தேதி ஒத்து வராததால்,  அவருக்கு பதிலாக தன்னுடைய 18 வயது மகன் ஆலிவர் டையமென் (Oliver Daemen) செல்வார் என கூறப்படுகிறது. இதனை புளூ ஆரிஜின் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் முதல் இளம் வயது நபர் என்கிற பெருமையை ஆலிவர் டையமென் பெற உள்ளார்.

ஆனால் ஜெப் பெசோஸுக்கு முன்பாகவே, கடந்த 11ம் தேதியில், பிரிட்டன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் ஐந்து நபர்கள் கொண்ட குழுவுடன் தன் சொந்த நிறுவனம் விர்ஜின் கேலடிக் மூலம் விண்வெளியில் 90 கிமீ பயணித்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Area 51: அமெரிக்காவில் உள்ள மர்ம இடம்; வேற்று கிரகவாசிகள் வசிக்கும் இடமா.. !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *