Share on Social Media


அமெரிக்கா நவீன கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் முக்கியத்துவக் கொடுக்கும் நாடு. அங்கு, ஒப்பிடமுடியாத நிபுணத்துவம் பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் பாதுகாப்புத் துறை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

உயரடுக்கு எஃப் -35 ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானங்கள் மற்றும் பல அதிநவீன உபகரணங்கள் என மிக முன்னேறிய ராணுவ இயந்திரங்களைப் கொண்டுள்ள அமெரிக்கா, சைபோர்க் வெட்டுக்கிளிகளை (cyborg locusts) உருவாக்கி வருகிறது.  

2016 ஆம் ஆண்டில் உருவான பென்டகனின் இந்த ஆய்வுத் திட்டத்திற்கு, கடற்படை ஆராய்ச்சி அலுவலகம் நிதியுதவி அளிக்கிறது. வெட்டுக்கிளியின் கொடுக்குகள் டி.என்.டி (Trinitrotoluene) மற்றும் பிற வெடிபொருட்களின் வாசனையை வேறுபடுத்திப் பார்க்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ALSO READ | Tokyo Olympics:விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவால் வெளியிடப்பட்ட ‘பயோசென்சர்கள் மற்றும் பயோ எலக்ட்ரானிக்ஸ்: எக்ஸ்’ (Biosensors and Bioelectronics: X’) என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.  இந்த கண்டுபிடிப்பானது, அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

வெடிகுண்டு இருப்பதை கண்டறிய வழக்கமாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அதற்கு பதிலாக வெட்டுக்கிளிகள் பயன்படுத்தப்பட்டால், மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். மிகவும் சிறிய அளவில் இருக்கும் வெட்டுக்கிளிகளை தொலைதூரத்திற்கு அனுப்புவதும் எளிது. எனவே, இது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வெட்டுக்கிளிகளில் சென்சார் கொண்ட ஆண்டெனா பொருத்தப்படும்.

எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டு சைபோர்க் வெட்டுக்கிளி (cyborg locust) மோப்பம் பிடிக்க பயன்படுத்தப்படும். அதற்காக, டி.என்.டி, டி.என்.டி, ஆர்.டி.எக்ஸ், பி.இ.டி.என் (TNT, DNT, RDX, PETN), அம்மோனியம் நைட்ரேட் (ammonium nitrate) போன்ற வெடிக்கும் ரசாயனங்களை நுகர்ந்தறியும் திறன் வெட்டுக்கிளிகளுக்கு உண்டு என மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதை அவை ஒரு நொடிக்குள் செய்ய முடியும்.
 
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, locusts வகை வெட்டுக்கிளிகள் grasshoppers வகை வெட்டுக்கிளிகளிலிருந்து வேறுபட்டவை, ஆராய்ச்சியில் locusts வகை வெட்டுக்கிளியே பயன்படுத்தப்படுகிறது. இவை பெரிய அளவிலான திரள் திறனைக் கொண்டிருப்பதால் 250 மில்லியன் ஆண்டுகளில் நுகர்திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளன, அவற்றின் ஆண்டெனா அல்லது கொடுக்குகள் சுமார் 50 வெவ்வேறு வகை 50,000 நியூரான்களைக் கொண்டுள்ளன.

Also Read | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி

சைபோர்க் வெட்டுக்கிளிகள், சென்சார்களுக்கான அவற்றின் அபரிமிதமான நுண்ணுணர்வு காரணமாக, மைக்ரோ ரோபாட்டிக்ஸின் அளவு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பேட்டரி மூலம் இயக்க முடியும்.

இந்த ஆராய்ச்சியில், வெட்டுக்கிளிகள் மீது ‘insect-sized’ லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மின்முனைகள் மற்றும் டிரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்தி, வெட்டுக்கிளிகளின் நுகர்திறனை ஆராய்ச்சியாளர்கள் காண்பித்தனர். 

“மின்னணு மூக்கு (electronic noses) என பிரபலமாகக் குறிப்பிடப்படும் இந்த பணிக்கான பொறியியல் சாதனங்கள், உயிரியல் அதிர்வு அமைப்பின் பரந்த-ஸ்பெக்ட்ரம் திறன்களுடன் ஒப்பிடும்போது குறைந்த திறன் கொண்டவை. எனவே, கலப்பின பயோ-எலக்ட்ரானிக் தீர்வை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். இது, ஆல்ஃபாக்டரி சென்சார்கள் மற்றும் அதிநவீன நரம்பியல் கணக்கீட்டு கட்டமைப்பை நேரடியாகப் பயன்படுத்துகிறது”.
 
வெட்டுக்கிளிகள் தனியாக இருப்பதை விட திரளாக இருக்கும்போது சிறந்த மோப்ப சக்தியைக் கொண்டுள்ளன.  பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்களைப் போல வெட்டுக்கிளிகளும் பயன்படுத்தப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.  

ALSO READ | ‘Anti-sex’ beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கைகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *