Share on Social Media


கர்ப்பகாலத்தில் பெண்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு கர்ப்பகால பராமரிப்பு கட்டுரையிலும் வலியுறுத்துகிறோம். கர்ப்பத்தின் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசியமான கொழுப்புகள் புரதங்கள் மற்றும் முக்கியமான வைட்டமின்கள் அவசியமாகிறது.

சரியான அளவு அன்றாட உணவில் சேர்க்கப்பட்டால் ஆரோக்கியமான கர்ப்பகாலமும், பிரசவக்காலமும் நிச்சயம். கர்ப்பகாலத்தில் பாதாமின் நன்மைகள், தினசரி அளவில் எவ்வளவு வரை எடுக்கலாம், எப்படி எடுக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

​கர்ப்பிணி பெண்கள் பாதாம் சாப்பிடலாமா?

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் அதிக வெப்பம் மற்றும் கொழுப்புச்சத்து காரணமாக கர்ப்பகாலத்தில் கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதை விரும்புவதில்லை.

கர்ப்பிணிக்கு அடிக்கடி வயிறு வலி, வெற்றிலை வெண்ணெய் கஷாயம் கொடுங்க, தயாரிக்கும் முறை!

கர்ப்பகாலத்தில் பாதாம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது. கர்ப்பிணி உலர் கொட்டைகள் சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என்பதற்கான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு முன்கூட்டியே பாதாம் ஒவ்வாமை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துகொள்ளலாம்.

ஆனால் கர்ப்பகாலத்தில் பாதாம் ஒவ்வாமை உண்டாக்காது. அதே நேரம் பாதாமை சரியான முறையில் எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் பாதாமை அப்படியே சாப்பிடுவது முன்கூட்டிய பிரசவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் மிதமாக எடுத்துகொள்வது நல்லது. பாதாமை எப்போதும் நீரில் ஊறவைத்து அதன் தோல் உரித்து சாப்பிட வேண்டும்.

​பாதாமில் இருக்கும் சத்துகள்

samayam tamil Tamil News Spot

பாதாம் 100 கிராம் அளவில் ஆற்றல் -576 கிலோ கலோரி, கார்போஹைட்ரேட்டுகள் – 21. 69 கிராம், கொழுப்பு – 49. 42 கிராம், புரதம் – 21. 22 கிராம், வைட்டமின்கள், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, பி9, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளது.

​கர்ப்பிணிகளுக்கு பாதாம் செய்யும் நன்மைகள்

samayam tamil Tamil News Spot

கர்ப்பகாலத்தில் பாதாம் சாப்பிடுவதால் உண்டாகும் சிறந்த நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். பாதாம் ஃபோலிக் அமிலத்தை கொண்டுள்ளது. இது மூளைக்கும் கருவின் நரம்பியல் வளர்ச்சிக்கும் ஒருங்கிணைந்த தேவையாகும். பாதாம் கொழுப்பு மற்றும் கார்ப்ஸ் நிறைந்த நல்ல மூலம் ஆகும்.

ஆக்ஸிஜனேற்றம், மன அழுத்தம், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றன. இது குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளின் வளர்சிதை மாற்ற கோளாறுகளிலிருந்து தடுக்க செய்கிறது. இது கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு , உடல் பருமன் இருப்பவர்களுக்கு உதவக்கூடும்.

இது பசியை குறைக்கும் லெப்டின் ஹார்மோன் குறைக்க செய்கிறது. கர்ப்பகால உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. பிரசவத்துக்கு பிறகு எடை குறைக்க இது உதவக்கூடும். இது இரும்புச்சத்து நிறைந்தது. வயிற்றில் வளரும் குழந்தையின் இதயத்தின் ஆரோக்கியம் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

தினமும் காலையில் 4 முதல் 6 பாதாம் வரை சாப்பிடுவது நன்மை தரும். ஊறவைத்து பாதாமை சாப்பிடுவதால் இது கொழுப்பை உடைத்து ஊட்டச்சத்துக்களின் செரிமானத்தையும் உறிஞ்சுதலையும் மேம்படுத்துகிறது. இது கர்ப்பிணியின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

​தினமும் எத்தனை பாதாம் வரை சாப்பிடலாம்

samayam tamil Tamil News Spot

கர்ப்பிணி பெண் ஒரு நாளில் சராசரியாக ஒரு அவுன்ஸ் அளவு சாப்பிடலாம். இது 23 முதல் 25 பாதாம் வரையிலான எண்ணிக்கை கொண்டுள்ளது. தினமும் காலை மாலை என இரண்டு வேளை பிரித்து எடுக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிடுவது எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் சிறந்த நன்மையை அளிக்கும் என்று சொல்லபடுகிறது.

பாதாமை திராட்சை மற்றும் பேரீச்சையுடன் கலந்து சாப்பிடலாம். இதனால் இரத்தத்தில் பீட்டாவின் தீவிரம் குறைக்கப்படும் இதனால் கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல் அவதியிலிருந்து விடுபடலாம்.

கர்ப்பகாலம்: தாயின் கை வயிற்றில் பட்டாலே குழந்தை அசைய கூடும் 22 வது வாரம், வேறு அறிகுறிகள் என்ன?

பாதாமை ஊறவைத்து தோல் உரித்து ப்ளெண்டரில் அரைத்து அதை பாலில் கலந்து காய்ச்சி பாதாம் பாலாக குடிக்கலாம். அல்லது பாதாமை சிற்றூண்டியாக மாலை வேளையில் அப்படியே சாப்பிடலாம். பாதாம் ஒவ்வாமை இல்லாதவர்கள் சரியான அளவில் பாதாமை தினசரி எடுத்துகொண்டால் கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் குறையாமல் இருக்கும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *