Share on Social Mediaபாதாம் தனித்துவமான சுவை கொண்டவை. சிறந்த சிற்றுண்டியாக இவை விரும்பப்படுகிறது. இது முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது என்றாலும் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். பாதாம் உண்டாக்கும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

​மலச்சிக்கலை உண்டாக்கலாம்

பாதாமில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. இது மலச்சிக்கலை உண்டாக்கலாம். ஒரு அவுன்ஸ் பாதாமில் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாக எடுத்துகொள்வது மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Ginger Effects : சிறுநீரக கல், பித்தப்பை கல் இருக்கிறவங்க இஞ்சியை சேர்க்க கூடாது, வேறு யாரெல்லாம் தவிர்க்கணும்? ஏன்?

பாதாம் அதிகமாக உட்கொள்ளும் போது பிற இரைப்பை குடல் அறிகுறிகள் வீக்கம், வாயு, வயிற்றுப்பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கலாம்.

​ஊட்டச்சத்து உறிஞ்சுதலை குறைக்கவும்

samayam tamil Tamil News Spot

அதிகப்படியான நார்ச்சத்து பாதாமில் உள்ளது. மேலும் மற்ற தாதுக்களுடன் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்றவை உண்டு. இது இரத்த ஓட்டட்த்தில் அவற்றின் உறிஞ்சுதலில் தலையிடலாம். பாதாம் கொட்டைகளின் முழு பலன்களை பெற பாதாம் பருப்பை சிற்றுண்டியாகவோ அல்லது உணவுக்கு இடையில் எடுத்துகொள்ளலாம்.

பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஃபைபர் உட்கொள்ளல் பெரும்பாலான மக்களுக்கு சுமார் 30 கிராம் அளவு மட்டுமே. அதை தாண்டி அவை வேறு சிக்கலையும் உண்டாக்கலாம்.

​எடை அதிகரிக்கலாம்

samayam tamil Tamil News Spot

ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளது. இது பிரச்சனை இல்லை என்றாலும் நீங்கள் பாதாம் பருப்பை அதிகமாக எடுத்துகொண்டால் வழக்கமான உணவின் மேல் நீங்கள் எடை குவிக்கலாம்.

உங்கள் உடற்பயிற்சியில் நீங்கள் ஈடுபடவில்லை எனில் இது உண்மையாக உங்கள் எடையை அதிகரிக்கும். பாதாம் பருப்புகளால் உடல் எடை கூடும் என்பது சாத்தியமில்லை. ஆனால் அதிகமாக எடுத்துகொள்வது மற்றும் மோசமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது எடை அதிகரிப்பை மேலும் மோசமாக்குகிறது.

​ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்

samayam tamil Tamil News Spot

அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரிக்கு பிறகு அமெரிக்காவில் பெரும்பாலான நட்டு ஒவ்வாமைகளை பாதாம் உண்டாக்குகிறது.

peanut oil : எடை குறைய டயட்டில் இருந்தா வேர்க்கடலை எண்ணெய் யூஸ் பண்ணகூடாது? வேறு யாரெல்லாம் தவிர்க்கணும்? ஏன்?

பாதாமில் உள்ள அமாண்டின் என்ற புரதம் ஒவ்வாமையை உண்டாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பாதாம் சில நபர்களுக்கு வாய்வழி ஒவ்வாமை நோய்க்குறியை ஏற்படுத்தலாம். அறிகுறிகளில் வாய் அரிப்பு, தொண்டை அரிப்பு மற்றும் நாக்கு, வாய் மற்றும் உதடுகளின் வீக்கம் போன்றவை உண்டாகலாம்.

பாதாம் அனாபிலாக்ஸிஸ் எனப்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினையை உண்டாக்கலாம். இந்த நிலை மூச்சுத்திணறல், படை நோய், குமட்டல் அல்லது வாந்தி, குழப்பம், பலவீனமான குரல், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இலேசான தலைவலி போன்றவையும் அடங்கும்.

​வைட்டமின் ஈ

samayam tamil Tamil News Spot

பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. அதிகமாக இதை எடுத்துகொள்வது வைட்டமின் ஈ அளவை அதிகரிக்கலாம். பாதாம் பருப்பை மட்டும் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஈ அதிகமாக இருக்காது என்றாலும் அதிகமாக எடுக்கும் போது அதன் பின்விளைவுகள் அறிந்திருப்பது அவசியம்.

ஏற்கனவே வைட்டமின் ஈ நிறைந்த பிற உணவுகளை (செறிவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை) உட்கொண்டால், அதிகப்படியான பாதாம் பிரச்சனைகளை உண்டாக்கும்.

வைட்டமின் ஈ அதிகமாக எடுத்துகொள்வது இரத்த உறைதலுக்கு இடையூறு உண்டாக்கும். மேலும் இரத்தப்போக்குக்கு வழி வகுக்கும். வைட்டமின் ஈ சப்ளிமெண்ட் அதிகமாக எடுத்துகொள்ளும் நபர்களில் இந்த விளைவுகள் முக்கியமானவை.

​சிறுநீரக கற்களை உண்டாக்கலாம்

samayam tamil Tamil News Spot

அதிகப்படியான பாதாம் சிறுநீரக கற்களை உண்டாக்கலாம். பாதாமில் குடலில் கரையக்கூடிய ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கற்களுக்கு பங்களிக்கும் கலவை ஆகும். பாதாமில் ஆக்சலேட்டுகள் அதிக உயிர்ப்புடன் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நூறு கிராம் வறுத்த பாதாம் பருப்பில் 469 மில்லிகிராம் ஆக்சலேட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

​உடலில் நச்சுக்களை அதிகரிக்கலாம்

samayam tamil Tamil News Spot

பாதாம் குறிப்பாக கசப்பான பதிப்புகள், சயனைடு விஷத்தை உண்டாக்கும். இனிப்பு பாதாம் உடன் ஒப்பிடும் போது கசப்பான பாதாம் பருப்பில் 40 மடங்கு HCN அளவு உள்ளது.

இந்த ஹைட்ரோசியானிக் அமிலம் சுவாசபிரச்சனைகள், நரம்பு முறிவு, மூச்சுத்திணறல் மற்றும் மரணத்துக்கு கூட வழிவகுக்கும். கர்ப்பிணி பெண் மற்றும் பாலூடும் பெண்களுக்கு கடுமையான உணவு தடையாகும்.

பாதாம் நம்ப முடியாத அளவுக்கு ஆரோக்கியமானது. ஆனால் மற்ற உணவை போன்றே இதுவும் மிதமான அளவு எடுக்க வேண்டும்.

​எவ்வளவு பாதாம் வரை சாப்பிடலாம்

samayam tamil Tamil News Spot

ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 23 கர்னல்கள் உள்ளன. பக்கவிளைவுகளை தடுக்க நாள் ஒன்றுக்கு எவ்வளவு பாதாம் வரை எடுக்கலாம் என்பது குறித்த அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை. நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பாதாம் பருப்புகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

IVF: செயற்கை கருத்தரிப்பு செய்து கொண்டால் புற்றுநோய் வருமா? என்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்?

நார்ச்சத்து கிடைக்கும் வகையில் பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவது நல்லது. பாதாம் ஆரோக்கியமானது. சமச்சீர் உணவுக்கு இவை முக்கியமானது. எனினும் மருத்துவருடன் கலந்து ஆலோசித்த பிறகு அதை மிதமாக உட்கொள்ள வேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.