Share on Social Media


தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளவர் நடிகர் அஜித். அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடும் விதத்தில் பல வித புதுமைகள் இருப்பதோடு அது ஒரு தனி பாணியையே உருவாக்கி விடுகிறது. தல அஜித் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் வைரலாகி விடுகின்றன.

அஜித்தின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்புவது நிச்சயம். பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அஜித்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். தற்போது அவர் எச் வினோத்துடன் இணைந்து ‘வலிமை’ (Valimai) படத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அஜித், போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் ‘தல 61’ படத்தில் எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இயக்குனர் போனி கபூர் மற்றும் தயாரிப்பாளர் எச்.வினோதுடனான அவரது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ​​சமீபத்திய அறிக்கை என்னவென்றால், தயாரிப்பாளர் போனி கபூருடன் தொடர்ந்து நடித்து வரும் அஜித் (Ajith), அடுத்த படமான ‘தல 62’-வில் மற்றொரு தயாரிப்பாளருடன் இணையக்கூடும். 
 
‘தல 62’ படத்தில் விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸுடன் கைகோர்க்க அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஜனவரி முதல் தனது தேதிகளை அஜித் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ALSO READ: இனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் – இயக்குனர் கார்த்திக் நரேன் ட்வீட்

‘தல 62’ படத்தில் விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸுடன் கைகோர்க்க அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஜனவரி முதல் தனது தேதிகளை அஜித் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரே அணியுடன் மூன்று படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றிய பிறகு, அஜித் இப்போது ஒரு புதிய குழுவுடன் இணைய முடிவு செய்துள்ளார். மேலும் இது மாற்றத்தைக் காண விரும்பும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தல 62 படத்தில் பல பெரிய பிரபல நடிகர்கள் இருப்பார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக வெள்ளித் திரையில் (Silver Screen) அஜித் காணப்பட்டார். எனினும், தற்போது குறுகிய காலத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ALSO READ:Actress Shalini: 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வருகிறாரா ஷாலினி அஜித்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *