Share on Social Media


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் விசில் தீம் மியூசிக் தற்போது வெளியாகி உள்ளது.  வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது.  படத்தின் டைட்டில் வெளி வந்ததிலிருந்து படத்தினைப் பற்றிய தகவல்கள் எப்பொழுது வெளிவந்தாலும் அது ரசிகர்களை ஆச்சரியமூட்டும் விதமாகவே இருந்து வந்தது. 

ALSO READ | ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது கூழாங்கல்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இப்படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியேவராததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, முதலமைச்சர் வரை வலிமை அப்டேட் ,வலிமை அப்டேட் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.  இதனிடையில் சமீபத்தில் வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது, அதன் பிறகு இரண்டாவது பாடலும் வெளிவந்தது. 

இன்னிலையில் பொங்கல் தினத்தில் வலிமை படம் திரையரங்கில் வெளிவர இருப்பதால் கூடிய விரைவில் இப்படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று விசில் தீம் மியூசிக் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக காலை முதலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தற்போது விசில் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. ஒன்றரை நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோவில் இதுவரை காட்டப்படாத அஜித்தின் சில புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.  யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த தீம் மியூசிக் சூப்பராக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இப்படத்திலிருந்து டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ALSO READ | அஜித் – யுவன் என்றாலே வெற்றி கூட்டணி! ஏன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *