Share on Social Media


H.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த தமிழ் படம் ‘வலிமை’.   இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு, சுமித்ரா, துருவன், புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  

ALSO READ | ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க போகும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

இப்படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் தவம் இருப்பார்கள்.  இப்படத்தின் டீசர் மற்றும் கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இப்படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களை கவர்ந்தது.  இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இப்படத்திலிருந்து “நாங்க வேற மாறி” என்கிற பாடலும்,  கடந்த டிசம்பர்-5ம் தேதி “நான் பார்த்த முதல் முகம் நீ! நான் கேட்ட முதல் குரல் நீ! ”  என்ற இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனைத்தொடர்ந்து வலிமை படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானத்திலிருந்தே ரசிகர்கள் பலரும் பாடலை கேட்க ஆர்வமுடன் காத்து  கொண்டிருக்கின்றனர்.  அதுமட்டுமல்லாது #valimai3rdsingle என்ற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் பலரும் ட்ரெண்ட் செய்து இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் கைகோர்க்கும் அஜித் – வினோத் கூட்டணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.