Share on Social Media


தற்போது H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் இயக்கத்தில் , நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘வலிமை’ படம் உருவாகி கொண்டிருக்கிறது.  இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு, சுமித்ரா, துருவன், புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.  கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இப்படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் தவம் இருப்பார்கள்.  இப்படத்திலிருந்து இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இப்படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களை கவர்ந்தது.  இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | ஹீரோ பில்டப்பில் கதையை கோட்டை விட்ட புஸ்பா! படம் எப்படி இருக்கு?

இந்நிலையில் ‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித்குமார் – வினோத் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அஜித்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.  இந்த படத்தின் கதையை ஏற்கனவே இயக்குனர் H.வினோத் அஜித்திடம் கூறியதாகவும், ஆனால் அந்த சமயத்தில் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை முதலில் எடுக்கலாம் என்று கூறியதால் இப்படம் கைவிடப்பட்டது.  ஆனால் தற்போது இந்த கதைக்கு அஜித் ஒப்புதல் தெரிவித்ததால் இப்படத்தின் பணி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ‘வலிமை’ படம் போல் அதிக சண்டைக்காட்சிகள் இல்லாமல், அதிகளவில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.  மேலும் இப்படம் முக்கியமான சமூக பிரச்னையை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ | ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க போகும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.