Share on Social Media


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். 

இதற்கிடையே அரசியலிலும் பிரபலமாக இருந்த குஷ்பு (Kushboo), தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். திமுக (DMK) வேட்பாளர் மருத்துவர் எழிலனை எதிர்த்து போட்டியிட்ட அவர் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டும் குஷ்பு தோல்வியை தழுவினார். தேர்தலுக்குப் பிறகு சற்று அரசியலில் இருந்து விலகியே இருந்து வரும் இவர் ட்விட்டரில் மட்டும் கருத்து தெரிவித்து வந்தார்.

ALSO READ | என்னைப் பார்த்து நீங்கள் பயந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல: கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு பதிலடி

இந்நிலையில் தற்போது குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டு, அதில் இருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் தொடர்ந்து வந்தனர். அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார். அவரது கணக்கு முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக @briann என்கிற பெயரில் உள்ளது. 

ஏற்கனவே கடந்த அண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியும் குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.

ALSO READ | புதிய சாதனையை படைத்த நடிகர் தனுஷ்; ட்விட்டரில் அசுரத்தனமான ஃபாலோயர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் ட்விட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *