Share on Social Media

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2) படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் (Vishal) மற்றும் பிரசன்னா (Prasanna) ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். 

ALSO READ | விஷாலின் திறமையை நிரூபிக்க ‘துப்பறிவாளன் 2’ ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமா?

இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கடந்த ஓராண்டாக இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படம் குறித்த அப்டேட்டை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *