Share on Social Media


Tamil Cinema News: தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.  தியாகராய நகர் துணை ஆணையரிடம் விஷால் தனது புகாரை அளித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரக இருப்பவர் நடிகர் விஷால். பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக சொந்தமாக படங்களை தயாரித்தும் வருகிறார். 

தமிழ் சினிமாவின் (Tamil Cinema) மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி. சௌத்ரி. எண்ணற்ற படங்களை தயாரித்துள்ள அவர் தமிழ் திரை உலகுக்கு எண்ணற்ற வெற்றிப்படங்களையும் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் (Actor Vishal) படத்தயாரிப்புக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார். பெரிய தொகையை கடனாகப் பெறும்போது அதற்கு ஈடாக சில முக்கிய பத்திரங்களை உறுதிமொழி ஆவணமாக வைப்பது வழக்கம். அந்த வகையில், நடிகர் விஷாலும், தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களையும் ஆவணங்களையும் அளித்துள்ளார். இவற்றுக்கு பதிலாக அவருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Chiyaan 60: முக்கிய அப்டேட்டை வெளியிட்டார் கார்த்திக் சுப்புராஜ்

சிறிது காலம் கழித்து நடிகர் விஷால் தான் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.  எனினும், தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பின்னரும், ஆர்.பி.சௌத்ரி தான் அளித்த உறுதிமொழி பத்திரங்களை திருப்பி அளிக்கவில்லை என்று விஷால் குற்றம் சாட்டியுள்ளார். 

கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் தனது ஆவணங்களை திருப்பி கொடுக்காமல் ஆர்.பி.சௌத்ரி இழுத்தடித்ததாகவும் விஷால் புகார் அளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி இந்த விஷயம் தொடர்பான பிற மோசடி செயல்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர் மீது நடிகர் விஷால் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

நடிகர் விஷால் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் (TN Police) விசாரணை செய்து வருகிறார்கள்.

ALSO READ: Kavin’s LIFT: பிக்பாஸ் கவினின் LIFT படம் தொடர்பான வெளியான மாஸ் ட்வீட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *