Share on Social Media

பதிவு செய்த நாள்

28
ஜூலை
2021
21:09

கோவை:‘டிரிப் கேப்பிடல்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2020ல், தமிழகத்தில் இருந்து, 412 கோடி ரூபாய் மதிப்பிற்கு காபி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

பெரும்பான்மையாக ‘இன்ஸ்டன்ட் காபி’ வகை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க, இவ்வகை காபி ஏற்றுமதியை அதிகரிப்பது அவசியம். மலபார் காபிக்கு உலகளவில் மவுசு உள்ளதால், அதிகம் விலை போகிறது. அதனால் சிறிய காபி தோட்ட விவசாயிகள் சோதனை முயற்சியாக, மலபார் காபி ஏற்றுமதியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், மலபார் காபி ஏற்றுமதி ஆண்டுக்கு, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில், காபி உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *