Share on Social Media

பதிவு செய்த நாள்

04
ஜூன்
2021
19:13

சென்னை:கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பிரபலமான, ‘விட்கோ’ நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.

இந்நிறுவனம், பயணங்களுக்கு தேவையான சூட்கேஸ் உள்ளிட்ட, ‘லக்கேஜ் கேரியர்’ பொருட்களை விற்பனை செய்து வந்தது. பல இடங்களில் கிளைகளை கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம், ஸ்கூல் பேக்குகள், சூட்கேஸ்கள், லக்கேஜ் டிராலிகள் ஆகியவற்றை பெருமளவில் விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில், தன் வணிகத்தை மூடிவிடுவதாக, அதன் இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், ‘நாங்கள் எங்கள் வணிகத்தை மூடுகிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ‘வணிகத்தை மூடும் முடிவை எடுப்பது எளிதான ஒன்றல்ல.

ஆனால், துரதிருஷ்டவசமாக கொரோனா பாதிப்புகள் மற்றும் சர்வதேச பயணங்களுக்கான தடை ஆகியவை காரணமாக, நிலைக்க முடியவில்லை. ‘கடந்த, 70 ஆண்டுகளாக ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி’ என, தெரிவித்துள்ளது. இந் நிறுவனம், 1951ம் ஆண்டு வெறும், 500 சதுர அடியில், வட சென்னையிலுள்ள, ஜார்ஜ் டவுனில் துவங்கப்பட்டது. அதன் பிறகு தொடர் வளர்ச்சியை கண்டு, பிரபல பிராண்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *