Share on Social Media

‘ஆன்லைன் ஷாப்பிங்’ ஐ.சி.ஐ.சி.ஐ., புதிய வசதி

பதிவு செய்த நாள்

23
ஜூன்
2021
06:58

சென்னை : கார்டுலெஸ் இ.எம்.ஐ., எனும், அட்டைஇல்லா தவணை வசதியை, ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்கும்போதும் பயன்படுத்தலாம் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வங்கியில் முன் அங்கீகாரம் பெற்ற வாடிக்கையாளர்கள், கார்டுலெஸ் இ.எம்.ஐ., சேவையை உபயோகித்து, தவணை வசதியை எளிதில் பெற முடியும். மொபைல் போன் மற்றும் ‘பான்’ எண்ணைப் பயன்படுத்தி, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க முடியும். பணம் மற்றும் அட்டைகளைப் பயன்படுத்த தேவையில்லை.

தற்போது, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதன் வாயிலாக, 7ஆயிரம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை பொருட்கள் அல்லது சேவையைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *