Share on Social Media


மாதவரம்-”சென்னையில் 96 சதவீதம் போலீசார், முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்,” என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே, 60 ‘சிசிடிவி கேமரா’ மற்றும் வாகன பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் நவீன கேமராக்களை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று இயக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், சென்னை வடக்கு போக்குவரத்து இணை கமிஷனர் துரை குமார், துணை கமிஷனர் டாக்டர் பிரதீப் குமார் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.மேலும், போக்குவரத்து போலீசாருக்கு, பணியின் போது பயன்படுத்தும், எட்டு வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.அதன்பின், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டி:சென்னை நெடுஞ்சாலைகளில், அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.போலீசாரால் தற்போது அபராதம் விதிக்கும் கையடக்க கருவியை பயன்படுத்தி ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் தினமும் 200 முதல் 250 வழக்குகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால், புதிய தொழில் நுட்பம் வாயிலாக 90 ஆயிரம் முதல் 1 லட்சம் பேருக்கு அபராதம் தொடர்பாக, இ – செலான் அனுப்ப முடியும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இதுவரை 96 சதவீதம் போலீசாருக்கு முதல் டோஸ், 44 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *