Share on Social Media


பெதேஸ்டா: அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் வயதானவர் ஜோ பைடன். அவருக்கு 79 வயது. இதனால் 2019ல் அதிபர் தேர்தலில் அவரது வயதை வைத்து பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பிறகு பைடன் முதல் முறையாக தனது வழக்கமான மருத்துவ பரிசோதனையை நேற்று முன்தினம் திடீரென மேற்கொண்டார். இது அமெரிக்கர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில், பைடனின் நீண்ட கால டாக்டரான கெவின் ஓ கார்னர் தலைமையில் பரிசோதனை நடைபெற்றது.  குறிப்பாக, பெருங்குடலில் செய்யப்பட்ட கொலோனோஸ்கோபி பரிசோதனையின் போது, 3 மிமீ அளவிலான திசு வெட்டி எடுக்கப்பட்டது. குடல் புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறிய இந்த திசு அடுத்த வாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என கார்னர் தெரிவித்தார்.

பைடனின் நடை தளர்வாக இருப்பதற்கு காரணம் அவரது முதுகுத்தண்டு தேய்மானம் அடைந்திருப்பதும், கடந்த ஆண்டு ஏற்பட்ட கால் முறிவும் காரணம் என அவர் கூறி உள்ளனர். காலை 10.10 மணிக்கு பரிசோதனைக்கு சென்ற பைடன் 11.35க்கு திரும்பினார். அதுவரை 85 நிமிடங்கள் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி வகித்தார். கொனோஸ்கோபி பரிசோதனையின் போது பைடனுக்கு மயக்க மருந்து தரப்பட்டு அவர் சுயநினைவின்றி இருப்பார் என்பதால், தற்காலிக அதிபர் பொறுப்பு கமலாவுக்கு வழங்கப்பட்டது. ஆய்வுக்குபின் கார்னர் அளித்த 6 பக்க அறிக்கையில், ’78 வயதாகும் பைடன், அவரது வயதுக்குரிய சில மருத்துவ பிரச்னைகள் இருந்தாலும், முழு நலத்துடன், தனது பொறுப்புகளை செயல்படுத்தக் கூடிய தகுதியுடன் உள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ரிப்போர்ட்
பைடனின் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் சுருக்கமாக:
சர்க்கரை பாதிப்பு – இல்லை
கண் பிரச்னை – இல்லை
தோல் புற்றுநோய் – அறிகுறி இல்லை
பல் பிரச்னை – இல்லை
ரத்த அழுத்தம் – 120/70
சிகரெட் பழக்கம் – இல்லை
மது பழக்கம் – இல்லை
அழற்சிகள் – சைனஸ் உள்ளிட்ட பருவகால ஒவ்வாமை உண்டு.
இதய பிரச்னை – லேசான இதய அரித்மியா (சீரற்ற இதயத்துடிப்பு) உண்டு.
நரம்பு பலம் – கை, கால்களில் தளர்வு (வயது முதிர்வு காரணமாக)
உடற்பயிற்சி – வாரத்துக்கு 5 நாள்

20 வயசு குறைஞ்சு போச்சு!
பரிசோதனைக்கு பிறகு பைடன் உற்சாகமாக வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அவர், ‘‘எதுவும் மாறவில்லை, நான் என் உடல் நலத்தை சொன்னேன். நல்ல உடல் வாகுடன் இருக்கும் நான் என் 58வது பிறந்தநாளை கொண்டாட தயாராகி விட்டேன்’’ என்றார் கிண்டலாக. நேற்று பைடனின் 79வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
* அமெரிக்க அரசியலமைப்பு 25வது சட்ட திருத்தத்தின்படி, அதிபரால் தனது பணியை மேற்கொள்ள முடியாதபோது,  துணை அதிபர் தற்காலிக அதிபராக பொறுப்பு வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *