Share on Social Media


டீசன்டாக போகும் இவர், பூட்டியிருக்கும் வீடுகளில் கைவரிசை காட்டும் போது.. யாராவது சந்தேகப்படும்படியாக கேட்டால், அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு சொந்தக்காரர் எனவும்; பத்திரிகை வைப்பதற்காக வந்திருப்பதாகவும்; அந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு ஊரில் இருந்து தான் வருவதாகவும் கூறி இதுவரை தப்பித்து வந்துள்ளார். இதுபோன்ற செயலை, கடந்த 8 வருடமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செய்து வந்துள்ளார். இதற்கு முன்பாக இவர் மீது வழக்குகள் இல்லாததால் இவரை உடனே சந்தேகிக்க முடியாமல் இருந்தது. காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் தற்போது கைது செய்துள்ளோம்.

காவல்துறை

காவல்துறை

இவரிடம் இருந்து 75 சவரன் தங்கம், அரை கிலோ வெள்ளி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கார் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பாக விசாரித்து வருகிறோம். அவரின் வாக்குமூலத்தின் படி, 454, 380 பிரிவுகளின் கீழ் 10 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அதேபோல சில சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என கூறுவது சரியாகத்தான் உள்ளது!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *