Share on Social Media

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெறவேண்டும் என்று சில பல ஆண்டுகளாகவே பலரும் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றனர். அதிலும் டி-20 ஃபார்மேட்டின் எழுச்சிக்குப் பிறகு, அதை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டே இருக்கிறது. 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ் என இரண்டு அணிகள் மட்டுமே கலந்துகொண்டு முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றிருந்தன.

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற மிகவும் வயதான வீரர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ஸ்வான். 1908 ஒலிம்பிக்கில் தன் அறுபதாவது வயதில் பங்கேற்ற அவர், துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம், 1 வெண்கலம் என மூன்று மெடல்கள் வென்றார். 1912 ஒலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெண்கலம் வென்று அசத்தினார். 1920 ஒலிம்பிக்கில் மீண்டும் பங்கேற்ற அவர், 1 வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு வயது 72 வருடம் 280 நாள்கள்! அந்த ஒலிம்பிக்கில் அவரது மகன் ஆல்ஃப்ரட் ஸ்வானும் பங்கேற்றிருந்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *