Share on Social Media


கூடலுார்:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. கேரளாவுக்கு 7,105 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் முல்லை பெரியாறு அணை உள்ளது; மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடிக்கு நீர் தேக்கலாம். பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,353 கன அடியாக இருந்தது.
தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1,867 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஆறு ‘ஷட்டர்’கள் வாயிலாக, கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு 7,105 கன அடி வெளியேற்றப் படுகிறது. இதனால், நேற்று காலை 6:00 மணிக்கு 141.90 அடியாக இருந்த நீர்மட்டம், காலை 9:00 மணிக்கு 141.80 அடியாக குறைந்தது. நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வைகை நிலவரம்

தேனி மாவட்டம், வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. நவம்பர் 12ல் 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால், அணைக்கு வரும் நீர் முழுதும் ஆற்றில் திறக்கப்பட்டது. நவம்பர் 30ல் அதிகபட்சமாக வினாடிக்கு 11 ஆயிரத்து 960 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.தற்போது, மழை குறைந்து நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 4,288 கன அடியாக இருந்தது. இதனால், நீர் திறப்பும் நேற்று காலை 2,964 கன அடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 70.11 அடியாக இருந்தது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *