Share on Social Media


புதுடில்லி:நம் நாட்டில், கொரோனா வைரசால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான அரசு, வரும், 30ம் தேதி, ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ஏழாவது ஆண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது:கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, வரும், 30ம் தேதி, மத்திய பா.ஜ., அரசின், ஏழாவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப் படுகின்றன.

பா.ஜ., ஆளும் மாநிலங்களில், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, தனித்துவிடப்பட்ட குழந்தைகளுக்காக, சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்யவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *