Share on Social Media


கோவை :  கடந்த கால தலைமுறை குழந்தைகளை விட இந்த கால குழந்தைகள் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கையாள்வதில் கைத்தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.  நாளுக்கு அவர்களின் செயல்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.  மாடலிங், பேஷன் ஷோ போன்றவற்றில் பங்குபெற பலரும் பாடுபட்டு, பல்வேறு மாற்றங்களை செய்து அந்த துறையில் ஜொலிக்க அரும்பாடுபட்டு வருகின்றனர்.  இருப்பினும் பலராலும் இதில் நிலைக்க முடியவில்லை. 

ALSO READ ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினி, கமல் திரைப்படங்கள்!

ஆனால் நம் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் சர்வதேச பேஷன் ஷோவில் பங்கு பெற உள்ளார்.  இது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  கோவை மாவட்டத்தில், ராம்நகர் பகுதியில் வசிப்பவர்கள் சிவகுமார்- கோமதி தம்பதி.  இவர்களுக்கு 6 வயதில் ராணா என்கிற மகன் இருக்கிறான்.  இந்த சிறுவனின் தந்தை துணிக்கடையும், தாயார் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர்.  கோமதியின் அழகு நிலையத்திற்கு ஓராடை வடிவமைப்பாளர் ஒருவர் வந்துள்ளார், அப்போது சிறுவன் ராணாவை பார்த்த அவர் உங்கள் மகனை ஏன் பேஷன் ஷோவில் பங்குபெற வைக்க கூடாது ? என்று கேட்டிருக்கிறார்.

 

இதுகுறித்த யோசித்த பெற்றோர், தன் மகனை இதில் பங்குபெற வைக்க நினைத்து கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் பங்குபெற செய்தனர்.  தனது 3 வயதிலேயே கலந்து கொண்ட முதல் ஷோவிலேயே சிறுவன் பரிசை வென்றான்.  இதனையடுத்து பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.  அதனை தொடர்ந்து சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, கோவா போன்ற இடங்களில் நடைபெற்ற ஜூனியர் பேஷன் ஷோக்களில் ராணாவை பங்குபெற செய்தனர்.  ராணாவும் அணைத்து போட்டிகளிலும் பரிசை வென்று குவித்தான் .

மேலும் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் மூலம் 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.  இந்நிலையில் வருகிற 23-ம் தேதி துபாயில் நடைபெற உள்ள சர்வதேச பேஷன் ஷோவில் இந்த சிறுவன் பங்கு பெற போகிறான்.  நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டியில், 15 உலக நாடுகளை சேர்ந்த மாடல்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் மாடல் ராணாவிற்கு மாடலிங் துறை மிகவும் பிடித்துள்ளதாம், வருங்காலத்தில் ஒரு கப்பற்படை அதிகாரியாக வேண்டும் என்பதே இவரின் கனவாம்.  இந்த சிறுவனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஸ்டர் இந்தியா : ஆணழகனை கைது செய்தது போலீஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *