Share on Social Media


ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், அங்குள்ள 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத்தில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. அதில், ஆமதாபாத் மாநகராட்சியில் 192 வார்டுகள், சூரத் மாநகராட்சியில் 120 வார்டுகள், வதோதரா மாநகராட்சியில் 76 வார்டுகள், ராஜ்கோட் மாநகராட்சியில் 72 வார்டுகள், பவ்நகர் மாநகராட்சியில் 52 வார்டுகள், ஜாம்நகரில் 64 வார்டுகள் உள்ளன. கடந்த 2015 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆமதாபாத்தில் பா.ஜ., -143; காங்கிரஸ் -48 வார்டுகளிலும், சூரத்தில் பா.ஜ.,-80; காங்கிரஸ் – 36 வார்டுகளிலும், வதோதராவில் பா.ஜ.,-58; காங்கிரஸ் – 14 வார்டுகளிலும், ராஜ்கோட்டில் -பா.ஜ.,38; காங்கிரஸ் -34 வார்டுகளிலும்; பவ்நகரில் பா.ஜ.,- 34; காங்கிரஸ் -18 வார்டுகளிலும், ஜாம் நகரில்- பா.ஜ.,-38 ; காங்கிரஸ் – 24 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன.

இந்த மாநகராட்சியில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 21ம் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன.

பிற்பகல் 4:00 மணி நிலவரப்படி,
6 மாநகராட்சிகளிலும் மொத்தம் உள்ள 576 வார்டுகளில் பா.ஜ., -341; காங்கிரஸ் – 38; மற்றவை 25 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.
192 வார்டுகளை கொண்ட ஆமதாபாத் மாநகராட்சியில் பா.ஜ., -101; காங்கிரஸ் – 15; மற்றவை 1லும் முன்னிலையில் உள்ளன.
52 வார்டுகளை கொண்ட பவ்நகர் மாநகராட்சியில் பா.ஜ.,-31, காங்கிரஸ் – 5 முன்னிலையில் உள்ளன.
64 வார்டுகளை கொண்ட ஜாம் நகரில் பா.ஜ.,-43 ; காங்கிரஸ் -6; மற்றவை -3ல் முன்னிலையில் உள்ளன.
72 வார்டுகளை கொண்ட ராஜ்கோட்டில் பா.ஜ.,-56 வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.
120 வார்டுகளை கொண்ட சூரத் மாநகராட்சியில் பா.ஜ.,-62; காங்கிரஸ்-5; மற்றவை 21ல் முன்னிலையில் உள்ளன.
76 வார்டுகளை கொண்ட வதோதரா மாநகராட்சியில் பா.ஜ.,-48; காங்கிரஸ் – 7 வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.
அடுத்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *