Share on Social Media


புதுடில்லி: ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது முதல் பெகாசஸ் ஒட்டுக்கேட்டு விவகாரம், வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்ட, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளில் ஈடுபட்டு வந்தனர். இதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜ்யசபாவில் பெகாசஸ் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் தாக்கல் செய்தபோது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., ஒருவர், அறிக்கையை பறித்து, அதனை கிழித்து அவை தலைவர் இருக்கையை நோக்கி எறிந்தார். அவருக்கு அவை தலைவர் வெங்கையா நாயுடு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அதன்பின்னரும் கூட்டத்தொடரில் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (ஆக.,04) ராஜ்யசபாவில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், தொடர் அமளியில் ஈடுபட்ட திரிணமுல் காங்., எம்.பி.,க்கள் 6 பேரை இன்றைய நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *