Share on Social Media


சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த மத்திய இணை மந்திரியின் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  தற்போது அரசியல் பிரபலங்கள் பலர் மக்களை ஏமாற்றி பண மோசடி புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.  மற்றவர்களின் பலவீனத்தை அறிந்து, பதவி ஆசை  காட்டி அவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது – காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணியிலுள்ள ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்குமார்(29).  பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரான இவர் கடந்த ஜூலை மாதத்தில் சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.   அவர் அளித்த அந்த புகாரில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது சித்தப்பா மகள் சகோதரி வசந்தியை தேர்தலில் போட்டியிட வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டோம்.  அந்த சமயத்தில் கட்சி ரீதியாக ஒருவருடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவர் பெயர் விஜயராமன், பெரம்பூரை சேர்ந்த இவரின் மூலமாக, பாஜாகாவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமனின் அறிமுகம் கிடைத்தது.  நல்ல முறையில் என்னிடம் பேசிய அவர் MLA சீட்டு வாங்கி தருகிறேன், அதற்கென்று ரூ.1 கோடி நீங்கள் தர வேண்டும் என்றும் கூறினார்.  மேலும் முன்னதாக ரூ.50 லட்சத்தை தந்து விடுங்கள், தேர்தல் பட்டியலில் பெயர் வந்ததும் மீதி 50 லட்சம் பணத்தை தாருங்கள் என்று கூறினார்.  அவரின் பேச்சை நம்பிய நான் முன் பணமாக ரூ.50 லட்சத்தை கொடுத்துவிட்டு, ஆவலாக காத்திருந்தேன்.  ஆனால் அந்த பட்டியலில் என்னுடைய சகோதரி பெயர் இடம்பெறவில்லை.  இதனால் ஏமாற்றம் அடைந்த நான் அவரிடம் சென்று நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கூறினேன்.

ஆனால் அவர் பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.  இந்த மோசடியில் நரோத்தமன் தந்தைக்கும் தொடர்பு உள்ளது. அதனால் விஜயராமன், நரோத்தமன், அவர் தந்தை சிட்டிபாபு ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார்.  இதனையடுத்து நரோத்தமனை இணை மந்திரி கிஷன் ரெட்டி தனது உதவியாளர் பொறுப்பிலிருந்து நீக்கினார்.  கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கினர்.  இந்நிலையில் இந்த தகவலறிந்த மூவரும்,  தலைமறைவாகினர்.  அதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.  அப்போது ஹைதராபாத்தில் நரோத்தமனும் அவரது தந்தை சிட்டிபாபுவும் இருக்கும் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அவர்களை ஹைதராபாத் சென்று அதிரடியாக கைது சென்னை கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு 1 லட்சம் – தொடரும் ஜெய்பீம் சர்ச்சை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *