Share on Social Media


இதுகுறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், “முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரின் நேற்றைய தினமே புதிய வைரஸ் பரவாது தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்தவர்களின் பட்டியல்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கண்காணிக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதோடு, நேற்று இங்கிலாந்திலிருந்து சென்னை திரும்பிய 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காகக் கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திருந்து திரும்பும் அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஐந்து மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளது. இந்த வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரும் அரசு கூறியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் அலட்சியம் இருக்கக்கூடாது. முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியையும் அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் செப்டம்பர் மாதம் கடைசியில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்று முதல் தான் விமானத்திற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களைக் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டிருப்பதோடு, அவர்களின் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சம்பந்தப் பட்ட அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது. அதோடு, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அரசுக்குத் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

என்னதான் அரசு எத்தனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த கொரோனா தொற்று பரவாது தடுப்பது மக்களாகிய நமது கைகளில் தான் இருக்கிறது. நாம் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதையும், சரியான தனி மனித இடைவெளியையும் கடைப்பிடித்தால், கொரோனா பரவலிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *