Share on Social Media


தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து, தனது திறமையான நடிப்பால் இன்றளவும் வெற்றி நாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம்.  நான்கு வெவ்வேறு கதைக்களத்தில், வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமின் படங்கள் ஒரே வருடத்தில் ரிலீசாக போகிறது.  அந்த படங்களின் வரிசைகள் பின்வருமாரு;

கோப்ரா (Cobra) :

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் “கோப்ரா”.  இப்படத்தை செவன் க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  இத்திரைப்படத்தில் ஸ்ரீ நிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிர்னாலினி ரவி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்திலிருந்து வெளியான ‘தும்பி துள்ளல்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.   இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  கொரோனா தொற்றால்  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தள்ளி போன நிலையில் அடுத்த ஆண்டு ‘கோப்ரா’ படம் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் (PonniyinSelvan) :

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக பல முன்னணி நட்சத்திர பட்டாளங்களை வைத்து அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வெளியாகவுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.  விக்ரம் , ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானத்திலிருந்தே இப்படம் குறித்த ஆவல் அனைவருக்கும் அதிகரித்துவிட்டது.  இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ‘ஆதித்ய கரிகாலன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.   விக்ரம் நடிக்கும் இப்படத்தின் முதல்பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மஹான் (Mahaan) :

பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் விக்ரமை வைத்து உருவாக்கியுள்ள  படம் ‘மஹான்’.  இப்படத்தை செவன் க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 துருவநட்சத்திரம் (Dhruva natchathiram) :

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிபில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘துருவநட்சத்திரம்’.  இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரித்விராஜ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் நடத்தப்பட்டது.  இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார்.   பல பிரச்சனைகளை கடந்து விக்ரம் நடிக்கும் இந்த படமும் அடுத்த ஆண்டு ரிலீசாக அதிக வாய்ப்பு உள்ளது.

dhruv

ALSO READ சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *