Share on Social Media


தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேலங்குடியில் 4 தலைமுறை கண்ட 132 வயது மூதாட்டி இறந்தார்.

தொண்டி அருகே வேலங்குடியை சேர்ந்தவர் 132 வயதான சந்தனம்மாள். இவரது கணவர் ஆரோக்கியசாமி, அதே கிராமத்தில் தோட்டக்காவலாளியாக வேலை பார்த்தார். இருவரும் ஓட்டு வீட்டில் வசித்தனர். இவர்களுக்கு மூன்று மகன்களும்,மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகன் விபத்தில் இறந்து விட்டார். ஆரோக்கியசாமி 1982 ல் இறந்தார்.

மற்றொரு மகனுடன் அதே வீட்டில் சந்தனம்மாள் வசித்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சந்தனம்மாள் நேற்று இறந்தார்.இவர் பேரன்,பேத்திகளுடன் நான்கு தலைமுறையாக வாழ்ந்துள்ளார். இவரது உடலுக்கு கொடிப்பங்கு ஊராட்சி தலைவர் சாந்தி ரவிச்சந்திரன், கிராமத்தினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *