Share on Social Media

மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு 2,000 பேர் புதிதாகத் தொற்றுக்கு உள்ளானார்கள் (பிரிட்டனின் மக்கள்தொகை சராசரியாக 6.76 கோடி).

இறப்பு எண்ணிக்கை சராசரியாக 15 ஆக இருந்தது. மே மூன்றாம் வாரத்திலிருந்து தொற்று அதிகரிக்க ஆரம்பித்து நான்காயிரத்தைத் தொட்டது. ஆனால், இறப்பு எண்ணிக்கை 5, 7 என்றுதான் இருந்தது.

இதுபற்றிப் பேசிய பிரிட்டனின் தடுப்பூசி துறை அமைச்சர் நதீம் ஜஹாவி, `ஜூன் 21-ல் லாக்டௌனை முழுவதுமாக விலக்குவது குறித்து முற்றிலும் உறுதியாகச் சொல்ல இயலாது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் ஏற்படும் பாதிப்பை வைத்து ஜூன் 14-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அதுபற்றி முடிவு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

COVID-19 vaccine

COVID-19 vaccine
AP Photo/Matt Slocum

இங்கு தற்போதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி கார்டு என்று ஒன்று தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே போட்டிகளைக் காண அனுமதி உண்டு. ஒருதவணை செலுத்திக்கொண்டவர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டியைக் காண அனுமதி இல்லை. பார்கள், ரெஸ்டாரன்ட் போன்றவை செயல்படுகின்றன. ஒரு மேஜைக்கு 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை. பூங்கா போன்ற பொது இடங்களில் இரு வேறு குழுக்களுக்கு இடையில் தனிமனித இடைவெளி அவசியம். வாக்சின் கார்டு உள்ளவர்களுக்கு உறவினர் இறுதிச்சடங்கு போன்ற முக்கியமான காரியங்களுக்கு அனுமதி உண்டு.

இந்தியாவுக்கு விமான போக்குவரத்தில் கட்டுப்பாடு அதிகம். சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மிகவும் குறைவான அளவில் கனெக்டிங் விமானங்கள் மூலம் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள்கள் ஏர்போர்ட் அதாரிட்டி மருத்துவமனைகளில் க்வாரன்டீன் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு பிரிட்டனில் உருமாறிய வைரஸ் பரவுகிறது என்று அச்சத்திலிருந்தோம். தற்போது இந்தியாவிலிருந்து உருமாறிய வைரஸ் பிரிட்டனை அச்சுறுத்தி வருகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *