Share on Social Media


கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்றார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்று, ‘ஹாட்ரிக்’ அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது. இதில், மம்தா பானர்ஜியை புதிய முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக பதவியேற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனால் மம்தா முதல்வர் பதவியேற்க எந்தத் தடையும் இல்லை.
பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று (மே 5) காலை 10:45 மணிக்கு மம்தா, கவர்னர் ஜகதீப் தங்கர் முன்னிலையில் பதவியேற்றார். ‛மூன்றாவது முறையாக பதவியேற்ற மம்தாவை வாழ்த்துவதாக’ கவர்னர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *