Share on Social Media


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஜூன் 7-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், தற்போது ஜூன் 14-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பலரும் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அழியா நிலை முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்படுவதை அறிந்த அறந்தாங்கியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் முரளி, அருண், விக்னேஷ் உள்ளிட்ட சிலர் ஒன்றிணைந்து, தங்களால் முடிந்த தொகையை ஒதுக்கி அங்குள்ள 250 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் வாங்கிக் கொடுத்து இலங்கைத் தமிழ் உறவுகளை நெகிழ வைத்திருக்கின்றனர்.

மளிகைப் பொருட்கள்

மளிகைப் பொருட்கள்

இதுபற்றி, பொறியியல் பட்டதாரி இளைஞர் அருணிடம் பேசினோம்.

“நாங்க எல்லாரும் நண்பர்கள். சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா சென்னையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். கொரோனா பிரச்னை ஆரம்பிச்சதுல இருந்து தொடர்ச்சியா எங்களுக்கு வேலை கிடைக்காத நிலை. ரொம்ப நாள் சும்மாதான் இருந்தோம். வீட்டுல சப்போர்ட் பண்ணாங்க. இப்போ எல்லாரும் ஒண்ணு சேர்ந்து உள்ளூர்லயே சொந்தமா ரெண்டு, மூணு புராஜெக்ட் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருக்கோம். அழியா நிலை முகாம்ல இருக்கவங்க பலரும் பெயின்டர் வேலை பார்ப்பாங்க.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *