Share on Social Media

​கர்ப்பத்தின் 22 வாரங்களில் குழந்தையின் வளர்ச்சி

கர்ப்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சி குழந்தை செவிப்புலன், பார்வை, தொடுதல் உணர்வு, மேம்படுவதால் வெளி உலகை நன்றாக உணர்வார்கள். குழந்தை வலிமையாக இருப்பார்கள்.

பிரசவ வலியை குறைக்கும் முடக்கறுத்தான் பற்று, பிரசவமும் எளிதாக்கும்!

குழந்தைக்கு கூந்தல் வளர்ந்திருக்க கூடும். சருமத்தில் ஆழமாக சுருக்கங்கள் உள்ளது. குழந்தை தனியாக சுவாசிப்பார்கள். நுரையீரல் வளர்ச்சியும் வேகமாக இருக்கும். குழந்தைக்கு பகல் நேரமும் இரவு நேரமும் தெரியகூடும்.

தாயின் குரல், இதயத்துடிப்பு, வயிறு மற்றும் அம்மா இசைக்கருவி ஒலித்தாலும் அதன் வித்தியாசமான ஒவ்வொரு ஒலியையும் குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும். குழந்தையின் உதடுகள், ஈறுகளின் கீழ் பற்கள் உருவாகி இருக்கும். தாயின் கைகள் வயிற்றில் பட்டாலே அதை உணர்ந்து குழந்தை அசைவை கொடுக்கலாம்.

​22 வார கர்ப்பத்தில் வயிற்றில் குழந்தை அளவு

22-

22 வார கர்ப்பத்தில் குழந்தையின் வளர்ச்சியில் குழந்தையின் எடை அதிகமாக இருக்கும். இறுதியாக கிட்டத்தட்ட 0.5 கிலோ எடையாக இருப்பார்கள். குழந்தையின் அளவு பப்பாளி அளவில் இருக்கலாம். 22 வார கர்ப்பிணியில் குழந்தையின் அளவு தலை முதல் கால் வரை ஒரு அடி வரை இருப்பார்கள். கரு சிறு குழந்தையை போல இருக்கலாம்.

​22 வார கர்ப்பத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள்

22-

கர்ப்பகாலத்தில் உடல் மாற்றங்களில் இந்த 22 வது வாரத்தில் உண்டாகும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

கூந்தலில் மாற்றம்

கூந்தல் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். முடி பளபளப்பான தோற்றத்தில் இருக்கும். கர்ப்பகாலத்தில் முடி உதிர்வு குறைவாக இருகும். இந்த ஹார்மோன்கள் அனைத்தும் உங்கள் உடலில் புழக்கத்தில் இருப்பதால் இது போன்ற நிலையில் உடல் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான ஆண் பாலியல் ஹார்மோன்கள் காரணமாக உடலில் சில இடங்களில் முடி வளர்ச்சி பார்க்கலாம்.

சருமத்தில் மாற்றம்

சில கர்ப்பிணி பெண்கள் தங்கள் சருமம் ஒளிர்வதை பார்க்கலாம். சிலர் வீக்கமடைந்த முகப்பரு நிறைந்த சருமத்தை பெறுகிறார்கள். மெலனின் அளவுகளில் தாவல்கள் இருண்ட திட்டுக்களை உருவாக்க கூடும். சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதன் மூலம் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடமிருந்து இருண்ட சருமத்தை பாதுகாக்கலாம்.

வயிற்றில் நமைச்சல்

இது அரிதானது. சிலருக்கு வயிற்றுப்பகுதியில் நமைச்சல் உண்டாகலாம்.

விரல்நகங்களில் வளர்ச்சி

இந்த வாரத்தில் தலைமுடி மற்றும் விரல் நகங்கள் வேகமாக வளரும். இவை மென்மையானவையாக இருக்காது. கடினமாக இருக்கும். சிலருக்கு உடையக்கூடும். இது ஒவ்வொருவரது உடல் நிலை பொறுத்தது.

மார்பகங்களில் மாற்றம்

மார்பகங்களில் முலைக்காம்புகள் மற்றும் ஐசோலோக்கள் முன்பை விட பெரியதாக இருண்டதாக மாறும். அது சிறிய வீக்கத்தை கொண்டிருக்கலாம். தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் போது முலைக்காம்புகள் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்க மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும்.

கால்களில் மாற்றம்

கர்ப்பிணிக்கு கால் எடிமா அல்லது நிர் காரணமாக வீக்கம் உண்டாகும். கடினமான மூட்டுகளை தளர்த்துவதற்காக ஹார்மோன் என்ற ரிலாக்ஸின் உற்பத்தி ஏற்படுவதாலும் இது நிகழலாம்.

​22 ​வது வாரத்தில் கர்ப்பிணிக்கு உண்டாகும் அறிகுறிகள்

22-

கடந்த இரண்டு வாரங்களில் பெற்ற அறிகுறிகளை இப்போதும் பெறுவீர்கள்.

இந்த வாரத்தில் அஜீரணம் பொதுவான அறிகுறியாக இருக்கலாம். மலச்சிக்கல் குழந்தை வளர்வதால் குடலை அழுத்துவதால் இவை உண்டாகிறது. கால்களில் தசைப்ப்பிடிப்பு உணரலாம். உணவில் தாதுக்கள் இல்லாததால் இது நிகழ்கிறது. யோனி பகுதியில் வழக்கத்தை காட்டிலும் திரவம் வெளியேறலாம். இந்த அறிகுறிகளை கடந்த இரண்டு வாரங்களாகவே உணரலாம்.

வயிறு பெரிதாக இருக்கும். நீடித்த தொப்புள் கொடியால் இவை உண்டாகலாம். இது பிரசவத்துக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த வாரத்தில் சோர்வாக இருப்பீர்கள். கருப்பையால் இரத்த நாளங்கள் மீது அழுத்தம் உண்டாவதால் மூளை சோர்வாக இருக்கும். இந்த வாரத்தில் பாலியல் ஆர்வம் அதிகமாக இருக்கலாம்.

முதுகுவலியை சற்று அதிகமாக உணர்வீர்கள். கூடுதல் எடையை சுமப்பதால் முதுகெலும்பில் குழந்தையின் அழுத்தம் படிவதால் இதை உணரலாம். சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம் வலியை குறைக்கலாம்.

​22 வாரத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் என்ன பார்க்கலாம்

22-

இந்த வாரத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் 3 டி ஸ்கேன் வழியாக பார்க்கும் போது கரு முன்பை விட குழந்தையை போல இருக்கும். உதடுகள் மற்றும் கணள் கிட்டத்தட்ட முழுமையாக இருப்பதை பார்க்கலாம். நடுப்பகுதியில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பகுதியில் குழந்தையின் அனைத்து உறுப்பு அமைப்புகளையும் பார்க்க செய்யலாம்.

கரு தூங்குவதை கவனிக்கலாம். குழந்தை நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வரை தூங்குவார்கள். இந்த நேரத்தில் ஸ்கேன் செய்யும் போது க் குழந்தை தூங்கினால் நீங்கள் இயக்கத்தை பார்க்க முடியாது. குழந்தையின் அசைவை அதிகம் உணரமாட்டீர்கள். குழந்தை எலும்பு மஜ்ஜையில் இருந்து இரத்த அணுக்களை உருவாக்குகிறது.

​22 வாரத்தில் கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

22-

கர்ப்பத்தின் மிக முக்கியமாக அம்சங்களில் ஊட்டச்சத்தும் ஒன்றாகும். 22 வது வாரத்தில் தவிர்க்க கூடாத சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 22 வது வார உணவில் கால்சியம், இரும்பு, மெகீசியம், வைட்டமின் பி காம்பளக்ஸ் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை.

இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்ளும் 21 வது வாரம், வேறு பிரச்சனைகளும், தீர்வுகளும்!

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொடுக்க கூடிய மீன் மற்றும் கொட்டைகளை தவிர்க்காதீர்கள்.. மீன்கள் எடுக்கும் போது பாதரச மீன்களை தவிர்ப்பது நல்லது. தினசரி 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *