Share on Social Media


கர்ப்பத்தின் 21 வது வாரத்தில் கருவின் வளர்ச்சி வேகமாக இருக்கும். குழந்தையின் அசைவை நீங்கள் அதிகமாகவே உணர்வீர்கள். இந்த காலத்தில் பிரசவத்தின் பாதி நாட்களை கடந்துவிட்டீர்கள். இன்னும் உடல் அறிகுறிகளை அனுபவிப்பீர்கள். இந்த வாரத்தில் கர்ப்பிணி உடலில் உண்டாகும் மாற்றம் மற்றும் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

​கர்ப்பத்தின் 21 வாரங்களில் குழந்தையின் வளர்ச்சி

கர்ப்பத்தின் 21 வது வாரங்களில் குழந்தை உங்களிடமிருந்து பெறும் உணவின் சுவையை சுவைக்க தொடங்குவாரக்ள். இந்த வாரத்தில் சுவை மொட்டுகள் உருவாக தொடங்கும். குழந்தை அம்னோடிக் திரவத்தை விழுங்க செய்வார்கள்.

குழந்தை ஊட்டச்சத்தை பெற்றாலும் நீங்கள் சாப்பிடும் திரவத்தை சுவைக்க செய்யும். அதனால் தான் கர்ப்பகாலத்தில் தாய் சாப்பிட்ட உணவை குழந்தைகள் வளரும் போது விரும்புகிறார்கள்.

சிசேரியனுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று உண்டாகுமா? எப்படி தவிர்ப்பது?

குழந்தையின் கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும். அதனால் குழந்தை உதைப்பதை நீங்கள் நன்றாக உணர்வீர்கள். குழந்தையின் பார்வை திறன், ஒலி அறியும் திறன் வளர்வதால் குழந்தைக்கு தாயின் பழக்கங்கள் அறிய உதவுகிறது.

இதனால் குழந்தை கருவிலேயே தாயின் குரலை அறிந்து கொள்ள உதவும் கருவிழிகள் நிறம் கிடைக்கவில்லை என்றாலும் புருவங்கள், கண் இமைகள் உருவாக கூடும்.

​21 வார கர்ப்பத்தில் வயிற்றில் குழந்தை அளவு

21-

குழந்தை 21 வாரத்தில் தலை முதல் கால்வரை 24 முதல் 25 செ.மீ அளவு நீளம் இருப்பார்கள். அதாவது 8 அங்குலம் வரை இருப்பார்கள். ஒரு பெரிய கேரட்டின் அளவு இருப்பார்கள். குழந்தையின் எடை 450 முதல் 500 கிராம் வரை இருக்கலாம்.

​.21 வார கர்ப்பத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள்

-21-

21 வது வார கர்ப்பத்தில் நரம்புகள் வீங்கி பருத்திருக்கும். குழந்தை பெரிதாகும் போது உங்கள் கால்களில் உள்ள நரம்புகள் மேலும் மேலும் அழுத்தத்தை அனுபவிக்கின்றன. இதனால் இரத்தத்தில் உள்ள புரோஜெஸ்ட்ரான் அளவுகளால் மோசமடைகிறது. இது நரம்புகள் வீங்கி பருத்து செய்ய உதவுகிறது.

இந்த வாரத்தில் வயிறு தொடைகள், இடுப்பு மற்றும் பிட்டம் போன்றவை விரிவடையும். கருவின் சுமைகள் அதிகரிக்க செய்யும். இங்குள்ள திசுக்கள் இருண்ட கோடுகளாக தோன்றும். . சருமம் மென்மையாக இருப்பவர்களுக்கு இந்த இருண்ட கோடு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இது பிரசவத்துக்கு பிறகு தொடர்ந்து இருக்கும். எனினும் இது குறித்து கவலையோ பயமோ கொள்ள தேவையில்லை.

உடலில் மரக்கிளைகள் போன்று ஆர வடிவத்துடன் கூடிய சிறிய நரம்புகள் கால்களில், கைகளில் முகத்தில் தோன்றலாம். ஆனால் இந்த சிலந்தி நரம்புகள் பிரசவத்துக்கு பிறகு சரியாக கூடும்.

முகப்பரு மோசமாக ஆகும் நேர்ம் இது. உடலில் ஹார்மோன் அளவு எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும். இது முகப்பருவை ஊக்குவிக்க செய்யும். அதே நேரம் முகப்பருவை குறைக்க மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். மேற்பூச்சு களிம்புகளை கூட தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் இது குழந்தைக்கு சிக்கலை உண்டாக்கலாம்.

​21 வது வாரத்தில் கர்ப்பிணிக்கு உண்டாகும் அறிகுறிகள்

21-

கர்ப்பத்தின் 21 வது வாரத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம். இந்த வாரத்தில் பிரசவ காலத்தில் உண்டாகும் உடல் உழைப்பு போன்ற அசெளகரியங்களை உண்டர்வீர்கள்.

மார்பகங்களிலிருந்து பால் அல்லது மஞ்சள் நிற கொலஸ்ட்ரம் கசிய கூடும். இந்த வாரத்தில் பால் குழாய்கள் முழுமையாக செயல்படுகின்றன. இது வேதனையல்ல என்றாலும் கர்ப்பிணிக்கு சங்கடத்தை உண்டாக்க செய்யும். இந்த இடத்தில் ஈரமான துணியை பயன்படுத்த செய்யலாம்.

தொப்பை நீண்டிருக்கும் என்பதால் சருமம் விரிவடைந்திருக்கும். இதனால் சருமம் வறண்டு இருக்கும். மாய்சுரைசர் மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

கால்களில் பிடிப்புகள் உண்டாகலாம் இது மிகவும் பொதுவான அறிகுறியாகும். கால்கள் வழக்கத்தை காட்டிலும் அதிக எடையை கொண்டிருப்பதால் உண்டாகலாம். அதனால் கால்களுக்கு மிதமாக மசாஜ் செய்வது நல்லது.

இந்த காலத்தில் ஈறுகள் வழக்கத்தைவிட அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். அதனால் பல் துலக்கும் போது கவனமாக துலக்க வேண்டும்.

​21 வாரத்தில் வயிறு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் என்ன பார்க்கலாம்

21-

கர்ப்பத்தின் 21 வது வாரங்களில் தொப்பை அதிகமாக இருக்கும். இது உடலில் சிரமத்தை உண்டாக்க கூடும். தொப்பை பெரிதாக, தட்டையாக என குழந்தையின் அசைவை காணலாம்.

வழக்கத்தை விட 5 அல்லது 6 கிலோ எடை கொண்டிருப்பீர்கள். குழந்தையின் எடை அம்னோடிக் திரவம், நஞ்சுக்கொடி, கருப்பை, அதிகரித்த இரத்தம் மற்றும் திரவங்கள். மார்பகங்களில் கொழுப்பு மற்றும் புரத சேமிப்பு போன்றவை உள்ளடக்குகிறது.

இந்த காலத்தில் கெகல் பயிற்சி செய்வதன் மூலம் கருபை மற்றும் இடுப்பு தசைகளை நன்றாக வைத்திருக்க முடியும். இந்த காலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால் குழந்தையின் உடலில் இதய அறைகள் மற்றும் மூளை அரைக்கோளங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

குழந்தையின் கை, கால்கள், இதர உறுப்புகள் கூந்தல் போன்றவற்றையும் பார்க்கலாம். இந்த காலத்தில் பிறக்கும் குழந்தையின் பிறவி இதய நோய்களை நிராகரிக்க கரு எகோகார்டியோகிராஃபி செய்வார்கள்.

​21 வாரத்தில் கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

21-

கர்ப்பிணி 21 வது வாரத்தில் இரும்புச்சத்துக்கான தேவை அதிகம். இந்த காலத்தில் குழந்தைக்கு சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க அதிகம் இரும்புச்சத்து தேவை. இந்த காலத்தில் இரும்பு குறைவாக இருந்தால் அது இரத்த சோகையாக மாறக்கூடும். இது சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றை உண்டாக்க கூடும்.

இந்த வாரத்தில் கீரைகள், சிவப்பு இறைச்சிகள், பருப்பு காய்கறிகள், மற்றும் மீன் போன்ற இரும்புச்சத்து நிறைந்தவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 2 வது வாரத்தில் இரும்புச்சத்துகள் அதிகமாக இருக்க மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள்.

கர்ப்பிணிக்கு 20 வாரம்: கருப்பை, விந்தணுக்கள் உருவாகும் வாரம், இன்னும் பல சுவாரஸ்யங்கள் உண்டு!

காஃபின் தவிர்ப்பது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கும். இந்த காலத்தில் எலுமிச்சை, திராட்சை, தர்பூசணி, மிளகாய் போன்ற வைட்டமின் சி நிறைய உணவுகளை உட்கொள்ளுங்கள். அதிக எடை அல்லது பருமனாக இருப்பது பிரச்சனையாக இருந்தால் முழு தானிய உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துகொள்வது அதிகரிக்க வேண்டும். இந்த காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருப்பது அவசியம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *