202010061616356664 Tamil News Nobel Prize 2020 for Physics awarded to Roger Penrose and SECVPF Tamil News Spot
Share on Social Media


ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேர் இந்த வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து நாளை (7ம்தேதி) வேதியியல் துறைக்கும், 8-ம்தேதி இலக்கியத்திற்கும், 9-ம்தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *