Share on Social Media


கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த அடுத்த விசாரணை அமெரிக்காவில் நடத்தப்பட வேண்டும் என்று சீனாவைச் சேர்ந்த தொற்று நோயியல் நிபுணர் ஜெங் குவாங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிறப்பிடம் சீனாவின் வூகான் மாகாண ஆய்வுக்கூடம்தான் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் 5 முக்கிய மாகாணங்களில் 7 பேர் கடந்த 2019ஆம் ஆண்டின் மத்தியில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று சீனாவைச் சேர்ந்த தொற்று நோயியல் நிபுணர் ஜெங் குவாங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த அடுத்த விசாரணை அமெரிக்காவில் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சீன நோய்த்தடுப்பு அமைப்பின் தலைவரான இவர் உள்பட பலரும் கலந்து கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, “கொரோனா வைரஸ் பரவலுக்கு உலகின் பல நாடுகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சீனா மட்டுமே காரணம் என்று கூறக்கூடாது” என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் உருவாக பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *